உயர்ந்த கட்டிடங்களிலும் விரைவாக ஏறும் இவனது இயல்பினால், அகமதாபாத் காவல்துறை இவனை ஸ்பைடர்மேன் என்று குறிப்பிட்டுள்ளது.
இவன் கடந்த வாரம் ஆனந்த் நகரில் உள்ள ரோஸ்வுட் அபார்ட்மெண்ட் என்ற குடியிருப்பில் திருடச் சென்றான். நன்றாக உடையணிந்திருந்த இவனை அங்கிருந்த காவலாளி ஏதும் கேட்காததால் உள்ளே சென்ற அவன் லிப்ட் மூலம் முதலில் மொட்டை மாடிக்குச் சென்றான். அதன்பின்னர் ஒவ்வொரு மாடியாக இறங்கி வந்து வீடுகளை நோட்டம் பார்த்துள்ளான்.
சுரேந்திர பாட்டில் என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரின் வீட்டை குறித்துக் கொண்ட அவன் மீண்டும் மாடிக்குச் சென்று தூங்கியுள்ளான். இரவு 1 மணி அளவில் அவரது வீட்டின் முன்கதவுப் பூட்டை உடைத்து அவன் உள்ளே நுழைந்தான். பல வருடங்களாகப் பூட்டியிருந்ததால் அந்த வீட்டில் திருடுவதற்குப் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேற முற்பட்டபோது குடியிருப்பின் தோட்டத்தில் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கீழே இறங்கினால்
மாட்டிக்கொள்வோம் என்ற நினைப்பில் சிறிது நேரம் கழித்து இறங்க நினைத்த அவன் மீண்டும் அங்கேயே தூங்கிப் போனான்.
மறுநாள் காலை 7 மணி அளவில் அங்கு வந்த வேலை செய்யும் பெண்மணி வீடு திறந்திருப்பதைப் பார்த்து அக்கம்பக்கத்தவர்களிடம் எச்சரித்து அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அவனைக் கைது செய்த
காவல்துறையினர் மூன்று வருடங்களுக்கு முன்னாலும் இதே குடியிருப்பில் வேறொரு வீட்டில் திருட முற்பட்டபோது கதவு பூட்டிக் கொண்டதால் இவன் மாட்டிக் கொண்டதாக தெரிவித்தனர். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திருட்டுகளில் இவன் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை இணைக் கமிஷனர் ஆர்.கே.பட்டேல் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment