மாலை முரசு அதிபரும், தேவி வார இதழின் நிர்வாக ஆசிரியருமான பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
தமிழர் தந்தை என்று போற்றப்பட்டவரும் தினத்தந்தி நிறுவனருமான சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் பா.ராமச்சந்திர ஆதித்தன்.
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்த இவர் தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்து மாலை முரசு பத்திரிகையின் அதிபரானார்.
பின்பு தேவி வார இதழைத் தொடங்கினார். தொடர்ந்து தேவியின் கண்மணி, பெண்மணி போன்ற இதழ்களையும் தொடங்கி நடத்தி வந்தார்.
தமிழ் நாளிதழ் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமையான நாளிதழான 'கதிரவனை' சென்னையிலும் நெல்லையிலும் தொடங்கினார்.
அன்றைக்கு மிக மிக வேகமாக வளர்ந்த நாளிதழ் என்ற பெருமை கதிரவனுக்கு உண்டு.
சென்னை அடையாறில் வசித்து வந்த ராமச்சந்திர ஆதித்தன், இன்று காலை லேசாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபங்களும் முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் அடையாறில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை பெசன்நகர் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment