மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளியே வந்திருந்த நடிகர் சஞ்சய் தத், பரோல் காலம் முடிந்து இன்று காலை புனேயில் உள்ள ஏரவாடா சிறைக்கு திரும்பியுள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் நடிகர் சஞ்சய் தத்.
இந்நிலையில் இவர் தனது காலில் வலி எனக் கூறி மருத்துவசிகிச்சைக்காக கடந்த 1ம் திகதி பரோலில். 14ம் திகதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி மேலும் 15 நாட்களுக்கு பரோலை நீட்டித்தார்.
இந்நிலையில் நேற்றோடு பரோல் காலம் முடிந்ததால், இன்று காலை 6.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்து சஞ்சய் தத் புறப்பட்டு மீண்டும் புனே சிறைக்குச் சென்றார்.
வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், இன்னும் கால்களில் வலி உள்ளது. முழுவதுமாக குணமடையவில்லை, நான் விரைவில் விடுதலையாக பிரார்த்திக் கொள்ளுங்கள் என்றும் அனைவரும் அளித்த ஆதரவுக்கு நன்றி, அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment