கூடங்குளம் 1 2 அணு உலைகள் 2004–ம் ஆண்டே இயங்கி விடும் என்று கூறினார்கள். ஆனால் அவைகள் இன்னும் இயங்கவில்லை. அவைகள் இனியும் செயல்பட வாய்ப்பேயில்லை. தொழிற்நுட்பக் காரணங்களால் முதல் இரண்டு அணு உலைகள் முடங்கிப்போய் கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அணுசக்தித்துறை
அதிகாரிகள் பலரும் முரண்பட்ட தகவல்களை மாற்றி மாற்றி கூறி மக்களை கடந்த 25 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர்.
தரம் குறைந்த இயந்திர அணுஉலை உதிரிப்பாகங்கள் வால்வுகள் கண்டன்சர் பிரச்சனை நீராவி என்ஜின்களில் கோளாறுகள் வால்வுகளில் கசிவு போன்ற பல சிக்கல்கள் கூடங்குளம் அணுஉலைகளில் உள்ளன. இப்படி
பாழடைந்து போல அணு உலைகள் குறித்தும் அவைகள் செயல்படாமல் போனதற்கான முறையான பதிலை போராடுகிற மக்களுக்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தாமல் இன்னும் மூடி மறைத்து கொண்டு தங்களுடைய தவறுகளை ஊழல்களை மறைப்பதற்காக தொடர்ந்து பல பொய்களை கூறி வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் போராடுகின்ற மக்களை மதிக்காமல் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தையும் மதிக்காமல் அதை தளர்த்தும் விதமாகவும் பல இலட்சம்
ஊழல்களில் சிக்கித் தவிக்கும் காங்கிரசு கட்சி மத்திய அரசு பதவி விலக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் காபந்து அரசு நடத்திக்கொண்டு இருக்கும் மன்மோகன்சிங் நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கி இன்னும் பதவி
விலகாமல் இன்னும் பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளும் பிரதமர் இந்திய நாட்டு மக்கள் சார்பாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் தகுதி இழந்த பிரதமர் தற்போது மீண்டும் ரஷ்யா சென்று அணுஉலையில் விபத்து நடந்தால் இழப்பீடு எதுவும் கேட்டமாட்டோம் என்கிற அடிப்படையில் கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் மேலும் 3 மற்றும் 4 அணுஉலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்வதற்காக இந்திய இறையாண்மையை
அடகுவைக்கும் விதமாக நீதிமன்றங் களையும் பாராளுமன்றத்தையும் இந்திய நாட்டுச்சட்டங்களையும் மதிக்காமல் இன்று ரஷ்யா செல்கிறார்.
பிரதமரின் இந்த மக்கள்விரோத தேசவிரோத போக்கைக் கண்டித்தும் பிரதமரின் இந்தச் செயல்பாட்டை தொடக்க நிலையிலே கண்டிக்காத தமிழகக்கட்சிகளின் நிலைப்பாட்டைக் கேள்விகேட்டும்
இடிந்தகரையில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் இடிந்தகரை கிராமத்தின் மேற்கு பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.புகைபடங்கள்,
0 கருத்துகள்:
Post a Comment