Search This Blog n

02 October 2013

சாகும்வரை உண்ணாவிரதம்! - காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்கக்


 
தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தனது ஆதரவாளர்கள் 15 பேருடன் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று மாலை 5.30 மணியில் இருந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.இலங்கை தமிழ் மக்களை கொடூரமாக கொன்று குவித்த சிங்கள அரசை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும், இந்திய அரசு இலங்கைக்கு போர்க்கப்பல் கொடுக்கும் திட்டத்தையும், கடலுக்கு அடியில் கம்பி வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும், கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
   
இந்த போராட்டத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று இரவு, தியாகுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் வன்னிஅரசு உள்பட கட்சி நிர்வாகிகளும் சென்று இருந்தனர். 3ந்தேதி அன்று(நாளை) இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நானும் கலந்து கொள்வேன், என்று தொல்.திருமாவளவன் அப்போது, நிருபர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கே.தியாகராஜன் என்ற தோழர் தியாகு. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை

மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளூர் சிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்தேன். இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். எனவே எனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த மைலாப்பூர் துணை

 போலீஸ் கமிஷனர், உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். காலவரையற்ற உண்ணாவிரதம் என்பது சட்டப்படி குற்றமாகும். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.அரசியல் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதிக்காத வண்ணம், உண்ணாவிரதம் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து போலீசார் முடிவு செய்யவேண்டும்.
எனவே உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து போலீசார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.அதேநேரம், மெரினா கடற்கரையில்

 உண்ணாவிரதம் இருக்க அனுமதித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீசார் கூறுவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர் வள்ளுவர் கோட்டம் அல்லது சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். மனுதாரர் உண்ணாவிரத போராட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். தன்னுடன் உண்ணாவிரத

போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரத்தை போலீசாரிடம் கொடுக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும்போது, அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதற்கு வந்தால், அவர்கள் வருவதற்கு முன்பே போலீசாரிடம் முன் அனுமதியை பெறவேண்டும்.மனுதாரர் உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொள்வது குறித்து, தேவையான நிபந்தனைகளை போலீசார் விதிக்கலாம். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்.
 

0 கருத்துகள்:

Post a Comment