Search This Blog n

20 October 2013

ஓரினச்சேர்க்கையால் வங்கி அதிகாரி கொலை!!:

 
ஓரினச்சேர்க்கை பிரச்சனையால் வங்கி அதிகாரியை கொலை செய்தோம் என்று கைதுசெய்யப்பட்ட 6 வாலிபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ்.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பெசன்ட் நகர் கிளையில் உதவி மேலாளராக பணிபுரியும் இவர் கடந்த 16ம் திகதி வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது கைபேசி, மோட்டார் சைக்கிள் கொள்ளை போய் இருந்தன. பீரோவும் உடைக்கப்பட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

பீரோ உடைக்கப்பட்டு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததால் கொள்ளை முயற்சியில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் பொலிசார் விசாரணையை தொடங்கினர்.
நாகராஜ் கொலையுண்ட இரவில் அவருடன் நண்பர்கள் சிலர் தங்கி இருந்ததாக கீழ் வீட்டில் வசிக்கும் அவரது தாய் கமலம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாகராஜிடம் நெருக்கமாக உள்ள நண்பர்கள் யார் என்ற விபரத்தையும், அவருடன் கைப்பேசியில் பேசுபவர்களுடைய பட்டியலையும் எடுத்தனர்.

இதில் அவருடன் அடிக்கடி பேசி தொடர்பு வைத்திருந்த வாலிபர்கள் சிவராம், கவுதம், கோகுல்கண்ணன், சுகன், ராஜு, விக்னேஷ் மற்றும் விஜய் ஆகியோர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இதனைத்  தொடர்ந்து திருவான்மியூர் பகுதியில் பதுங்கி இருந்த சிவராம், உள்பட 6 பேரை பொலிசார் பிடித்தனர். விஜய் மட்டும் சிக்கவில்லை.
கைது செய்யப்பட்ட 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில், வங்கி அதிகாரி நாகராஜுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தோம்.

சம்பவம் நடைபெற்ற அன்று இரவு மது அருந்தி ஜாலியாக இருந்த போது மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாங்கள் நாகராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என்றும் பொலிசாரின் விசாரணையை திசை திருப்புவதற்காக கொள்ளையடித்தது போல் பீரோவை உடைத்து, மிளகாய் பொடியை தூவினோம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய விஜய்யை பிடிக்க தனிப்படை பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment