இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகளில் ஏராளமான பெண்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாகி உள்ளனர்.
இந்தப் பெண் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வருகின்றனர். இத் தலைமறைவு குற்றவாளிகளின் முகவரிகள் இதோ.
நிழல் உலக தாதா டைகர் மேனனின் மனைவி ரேஷ்மா மேனன். 1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முதன்மை குற்றவாளிகளில் ஒருவர் ரேஷ்மா மேனன்.
டைகர் மேனனின் பயங்கரவாத செயல்களில் துணை நின்ற இவருக்கு எதிராக இண்டர்போல் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அத்துடன் இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர்.
இந்தியாவைவிட்டு வெளியேறிய ரேஷ்மா துபாயில் முதலில் தஞ்சமடைந்தார். பின்னர் பாகிஸ்தானின் கராச்சி இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது.
அடுத்ததாக நிழல் உலக தாதாக்களில் ஒருவரான அயூப் மேனனின் மனைவிதான் ஷபானா மேனன். இவர் மீதும் 1993ம் ஆண்டு மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயூப் மேனன், அவரது மனைவி ஷபானா மேனன் ஆகியோர் தாவூத் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள். இவரும் முதலில் துபாய்க்கு தப்பியோடி பின்னர் பாகிஸ்தானின் கராச்சியில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கும் ரூ25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் தேடப்படும் மிக முக்கிய பெண் குற்றவாளிகளில் முக்கியமானவர் ஷோபனா ஐயர். இவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரைப் பற்றிய தகவல் தருவோர் அல்லது பிடித்து கொடுப்போருக்கு ரூ10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நிழல் உலக தாதா அபு சலீமின் முன்னாள் மனைவி. 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அபு சலீம் பற்றிய ஏராளமான தகவல்களை அறிந்தவர் என்பதால் அவர் தேடப்பட்டு வருகிறார்.
அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக அவர் அமெரிக்காவில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் இந்தியாவால் தேடப்படுகிற முக்கிய பெண் குற்றவாளிகளில் அஞ்சலி மகானும் ஒருவர். அவருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிழல் உலக தாதா பப்லு ஸ்ரீவத்ஸ்வாவின் மிக நெருங்கிய நண்பர்தான் அர்ச்சனா பல்முகுந்த். வட இந்தியாவில் பல்வேறு கடத்தல் மற்றும் பணம் பறிப்பு சம்பவங்களில் இவருக்கு நேரடி தொடர்பு உள்ளது.
ஜாமீனில் வெளியே வந்தவர் அப்படியே தலைமறைவாகிவிட்டார். மணீஷா அகர்வால், மீனாக்ஷி அகுஜா, அர்ச்சனா என்ற போலி பெயர்களில் வலம் வரும் இவரை புனே பொலிசார் தேடி வருகின்றனர்.
கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் மோனிகா. 2001ம் ஆண்டு ரூ60 லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் சிக்கியவர். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்தபடியே குழந்தையைப் பெற்ற இவருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஜாமீனில் வெளியே வந்தவர் பொலிசிற்கு தண்ணி காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இவர் இன்னமும் பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார்.
0 கருத்துகள்:
Post a Comment