இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலின் கேப்டன் மற்றும் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே அமெரிக்க இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த ‘சீமேன் கார்டு ஓகியா‘ என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 11ம் திகதி இரவு மடக்கிப் பிடித்தனர்.
இந்த கப்பலில் கேப்டன் உள்ளிட்ட 35 பேர் இருந்தனர். அவர்களிடம் 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 5 ஆயிரத்து 675 தோட்டாக்கள் இருந்தன.
இது தொடர்பாக கப்பலில் இருந்த 33 பேரையும் நேற்று முன்தினம் கியூ பிரிவு பொலிசார் கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
கப்பல் பராமரிப்புக்காக கேப்டன் டட்னிக் வாலன் டின் மற்றும் தலைமை பொறியாளர் இருவரும் கப்பலில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கப்பல் நிறுவனம்,தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்திடம் கப்பலை பராமரிப்பு செய்வதற்கான பணிகளை தற்காலிகமாக ஒப்படைத்தது.
இதனால் கப்பல் கேப்டன் டட்னிக் வாலன்டின் மற்றும் தலைமை பொறியாளர் இருவரையும் பொலிசார் நேற்று மாலை 4 மணிக்கு கைது செய்து முத்தையாபுரம் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தலைமை பொறியாளர் ட்ரிக்கோ வாலரின், பொலிசார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறி குற்றம் சாட்டி கூச்சலிட்டதால் கியூ பிரிவு எஸ்.பி.பவானீஸ்வரி மற்றும் அதிகாரிகள் இருவரையும் தூத்துக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி அகிலாதேவி வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர்.
பின்னர் இருவரையும் அக்டோபர் 31ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆயுத கப்பலுக்கு டீசல் வழங்கியதாக தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் மரியஅன்டன் விஜய், விசைப்படகு ஓட்டுநர், வெங்கடேஷ் ஆகிய 3 பேரிடமும் கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment