சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளை இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள, இந்தியத் துணைத் தூதரகமும் இந்தச் சந்திப்பை
உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கும் முதல் வெளிநாட்டுப் பிரமுகராக, சல்மான் குர்ஷித் இடம்பெறுவார். அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். அதேவேளை, வரும் செய்வாயன்று யாழ்ப்பாணம் செல்லும், சல்மான் குர்ஷித், தெல்லிப்பழையில் இந்திய வீடமைப்புத் திட்டப் பணிகளை பார்வையிடவுள்ளதுடன், வடக்கு மாகாண ஆளுனரையும் சந்திக்கவுள்ளார். இதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment