எனது பாட்டி இந்திரா மற்றும் அப்பா ராஜிவைப் போல நானும் கொலை செய்யப்படலாம், ஆனால் அதற்கு அச்சப்படமாட்டேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி 2வது கட்டமாக இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி , நான் என் உள்ளத்தில் இருப்பதையே பேசி வருகிறேன். இதுவரை நான் சொல்லாத விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசத்தேவையில்லை, இருப்பினும் சொல்கிறேன். எங்களுக்காக என் அப்பா ராஜிவ் காந்தி போட்ட கட்டுப்பாடுகளை உடைத்து எங்களைக் காப்பாற்றியவர் பாட்டி இந்திராதான்.
என்னுடைய பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்பாக அவர் மீது கையெறி குண்டுகளை வீச திட்டமிட்டிருந்ததாக பின்னாளில் அறிந்து கொண்டேன். அன்று நான் புவியியல் பாடம் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒருநபர் எனது வகுப்பறைக்கு வந்து ஆசிரியரிடம் ஏதோ
சொன்னார், உடனே ஆசிரியர் என்னை வீட்டுக்குப் போகச் சொன்னார்.என்ன நடக்கிறது என்பதை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய வீட்டில் பணிபுரிந்த பெண்மணியிடம் அப்பா, அம்மா நலமா என்று கேட்டேன். ஆம் என்றார். ஆனால் பாட்டியைப் பற்றி கேட்ட போது இல்லை வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டனர்.
நாங்கள் வீட்டுக்குப் போனபோது தரையில் பாட்டியின் ரத்தம் சிதறிக் கிடந்தது. இன்னொரு அறையில் என்னிடம் நண்பர்களாகப் பழகியவர்கள் ரத்
தத்தில் மிதந்து போயிருந்தனர்.
என்னிடம் நண்பர்களாக பழகிய பியாந்த் சிங், சத்வத்சிங் மீது கடும் கோபம் எழுந்தது. இந்த கோபத்தை பல ஆண்டுகாலம் அடக்கியே வைத்திருந்தேன். இதேபோல் என்னுடைய தந்தையும் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படியான சம்பவங்களை இருமுறை நான் பார்த்துவிட்டேன். அவர்கள் என்னையும் கூட கொலை செய்யலாம். அதற்கெல்லாம் நான் அச்சப்படவில்லை, காங்கிரஸ் கட்சிதான் மக்களுக்கான உணவுக்கு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றியது.
மேலும் விவசாயிகளின் நிலத்தைப் பாதுகாக்கும் மசோதாவையும் நிறைவேற்றியது என்றும் இந்தியாவில் ஏழைகள் வாழ்கிறார்கள் என்று சொல்லவே கூடாது என்பதற்காக உணவு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றினோம் எனவும் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment