உயிருக்கு உயிராக காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியதில் விரக்தி அடைந்த இந்திய வாலிபர் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றார்.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் நுழைந்த பாலாஜி பாஸ்கரன்(21) என்பவர் யாரும் எதிர்பாராத வேளையில் கத்தியால் தனது கை மணிக்கட்டில் உள்ள நரம்பை அறுத்துக்கொள்ள முயன்றார்.
அப்போது, அங்கிருந்தவர்கள் பாய்ந்து சென்று அவரை வளைத்துப் பிடித்து அசம்பாவிதம் ஏதும் நேராதபடி தடுத்தனர். இருப்பினும், கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் உடனடியாக அவரை சல்மானியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாலாஜி பாஸ்கரன் இதற்கு முன்னரும் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக சக பணியாளர்கள் கூறியதால் அவருக்கு மனநல சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment