This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 July 2013

யானை இடித்ததால் தடுமாற்றமடைந்த முதல்வர் ஜெயலலிதா

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா யூன் 28ம் திகதி முதல் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட காரில் சென்ற இவர், அடர்ந்த வனப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள், மான் கூட்டங்களை பார்த்து ரசித்துள்ளார். பின்னர் தெப்பக் காட்டில் உள்ள யானை முகாமிற்கு வந்த முதல்வருக்கு 22 யானைகள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூர்த்தி என்ற மக்னா யானைக்கும் முதுமலை என்ற...

30 July 2013

! கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்

திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மீது, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நீது ஜெய்சிங்கானி(வயது 21) என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவரை தெருவோரத்தில் கடை நடத்தும் அமீத் தல்ரேஜா என்பவர் திருமணம் செய்ய விரும்பினார். இதனை நீதுவிடம் தெரிவிக்க, முதலில் சம்மதித்தவர் பின் வேண்டாம் என கூறினார். இதனால் கடும் கோபமடைந்த அமீத், நீது பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று கொதிக்கும்...

சுங்கத்தினரிடம் சிக்கினர்! தங்கம் கடத்தியவர்கள் ?

சென்னை சுங்க அதிகாரிகள் 2.5 கிலோகிராம் தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 14 பேரை கைது செய்துள்ளனர். இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து தங்க கட்டிகளை கடத்திக் கொண்டு வெவ்வேறு வானூர்திகளில் பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மற்றும் மதுரை போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலா வீசாக்களில் கொழும்பு, மலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது....

இலங்கையருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!!

மும்பையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இலங்கையர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் 2006 ஜனவரி 25ம் தேதி சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்த போது சிவானந்தன் என்பவர் தனது சூட்கேசில் 2.7...

28 July 2013

முதலமைச்சர் பதவியிலிருந்து விலக தயாரா?

முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்த தவறுகளுக்காக பதவி விலக வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 151 பேரில் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையானது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக...

மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து ;

எனது தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மாநில பட்ஜெட்டை நிறைவேற்ற நேற்று மேற்கு வங்காள மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- எனது தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் டார்ஜீலிங் மலைப் பகுதியிலும், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த ஜங்கிள்மகால் பகுதியிலும் அமைதி நிலவி வருகிறது. இந்த அமைதியை சீர்குலைக்கவும் மாநில...

27 July 2013

பிரபல தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல்!

தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ஒரு மர்ம போனில் மாகாத்மா மேல்நிலைப்பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அந்த இணைப்பை துண்டித்துள்ளனராம். இந்த தகவலை சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து மதுரை பொலிஸ் கொமிஷனர் சஞ்சய் மாத்தூருக்கு சொல்லியுள்ளனர். இதேபோல் மதுரை பொலிஸ் கொமிஷனர் அலுவலகத்துக்கும் மிரட்டல் வந்துள்ளது....

கிழிந்த நிலையில் தேசியக் கொடியை ஏற்றிய பொலிசார் !

இந்தியாவில் தேசியக்கொடியினை கிழிந்த நிலையில் ஏற்றிய இரு பொலிசார்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்காள பொலிஸ் துறையின் தலைமை செயலகத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது தேசிய கொடி ஏற்றப்படும். பின்பு அஸ்தமனத்தின் போது இறக்கி மறுநாள் காலை உரிய மரியாதையுடன் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த அலுவலகத்திலிருந்து தேசிய கொடி கிழிந்த நிலையில் பறப்பதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கிழிந்த...

பசிக்காக சாப்பிட்ட மாணவர்களை தனியறையில் பூட்டிய ?

உத்திரபிரதேச மாநிலத்தில் தவறு செய்த மாணவர்களை தண்டிக்கும் விதமாக தனியறையில் மாணவர்களை பூட்டி தண்டனை கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள கோஜ்வா பகுதியில் சரை சுர்ஜன் பிரிவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களான ஆயுஷ் மற்றும் ரதி ஆகியோர் மிகுந்த பசியின் காரணமாக மதிய உணவை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாப்பிட்டுள்ளனர். இதனைக் கண்டறிந்த ஆசிரியர் மாணவர்களைத் தண்டிக்கும்...

26 July 2013

ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு? சி.பி.ஐ.!!

சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஐ.டி. கணிதத் துறையில் பணியாற்றும் டாக்டர் வசந்தா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னை ஐ.ஐ.டி. கணிதத் துறையில் கடந்த 1988-ம் ஆண்டு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டேன். 1995-ம் ஆண்டு நடைபெற்ற இணை பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும், 1996-ம் ஆண்டு நடைபெற்ற பேராசிரியர் பணிக்கான...

விவசாயிகளுக்கு நிவாரணமாக 2 ரூபாய்க்கு காசோலை

 டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ. 2, ரூ.3  மற்றும் ரூ.6 என்று எழுதப்பட்ட காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. அரியான பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயிகளின் பயிர்கள் கடும் சேதத்திற்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்திடம் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு ஒரு தொகையை தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரியான அரசானது விவசாயிகளுக்கு...

24 July 2013

மதிய உணவுசாப்பிட்ட குழந்தைகளில் !!!

பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று போலீசில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரையும்...

பணமழையில் நனைத்த தொண்டர்கள்

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பணமழையில் நனைந்துள்ளார். தேனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான மாவட்ட நிதியளிப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள மு.க.ஸ்டாலின் மதுரையிலிருந்து கார் மூலம் தேனிக்கு வந்தார். அப்போது அவர் வரும் வழியில் மாவட்ட செயலாளர் மூக்கையா தலைமையில் தேனி மாவட்ட எல்லையான தெக்கானூரணியிலிருந்து தேனி நகருக்குள் வரும் வரை அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில்...

நடிகர் சஞ்சய்தத்தின் மனு நிராகரிப்பு: 42 மாதம்!!

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய்தத்தின் சிறை தண்டனையை குறைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகாலம்...

இந்தியாவில் புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியீடு

சுதந்திர போராட்ட வீரரான மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் புதிய ஐந்து ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படவுள்ளது. ரிசர்வ் வங்கியானது குறித்த சுதந்திர போராட்ட தியாகியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த நாணயத்தின் பின்புறம் மதன் மோகன் மாளவியாவின் உருவப் படம் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் கூகா இயக்கத்தின் 150ம் ஆண்டு நிகழ்வை குறிக்கும் வகையில் நாணயத்தின் பின்புற மத்தியில்...

23 July 2013

கட்டிலில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நடிகை மஞ்சுளா!!!

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா (59) கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். நடிகர் விஜயக்குமாரின் 2வது மனைவி நடிகை மஞ்சுளா. இவர், விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று படுக்கை அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து விட்டார். இதில் அவருடைய...

22 July 2013

ரூ.72 லட்சத்திற்கு ஏலம் போன சாய்னா நேவால்

ஐ.பி.எல் கிரிக்கெட்  லீக் போல் இந்தியன் பேட்மிண்டன் லீக்  நடைபெறுகிறது  இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒரு அணியில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் உள்ளிட்ட 11 பேர் இடம் பெறுகின்றனர். 150 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இன்று இந்த லீக்குகான வீரர் , வீராங்கனைகளுக்கான ஏலம் டெல்லியில்  தொடங்கியது.  ஏலத்தில் ஹைதரபாத் அணிக்கு சாய்னா நேவால் 72 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். ஆடவர்...

பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை : சிறப்பு புலனாய்வு ?

பாஜ மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் இந்து முன்னணி மாநில செயலாளர்  வெள்ளையப்பன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க, டிஜிபிக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:: தமிழக பாஜ பொது செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ், சேலத்தில் கடந்த 19ம் தேதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அரசியல்...

மீண்டும் கனமழை: 152 பேர் பலி - 5 லட்சம் பேர் தவிப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. ஷர்தா, காக்ரா, ராம்கங்கா, கங்கை, யமுனை, பெட்வா, கெய்ன், கோமதி, சாய், சராயு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோமதி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சீதாபூர், லக்னோ, சுல்தான்பூர் பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சராயு...

15 ஆயிரம் அழுகிய முட்டைகள் : ஊழியர் சஸ்பெண்டு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் அருகேயுள்ள் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி உள்ளது . இப்பள்ளிக்கு சத்துணவு மையத்துக்கு முட்டைகள் நேற்று பிற்பகல் மினிவேனில் எடுத்து வந்து இறக்கப்பட்டன. அப்போது பள்ளியிலிருந்து தனது மகனை அழைத்து வர மஸியூர் ரஹ்மான் என்பவர் சென்றுள்ளார். வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட முட்டைகளிலிருந்து தூர்நாற்றம் வீசியதால் அது குறித்து மினி வேனின் டிரைவரிடம் அவர் கேட்டுள்ளார். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹபிபுல்லா ரூமிக்கு...

எழுச்சியை நசுக்குவதற்கு பலிகடாவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் ?

முன்னால் உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் அதிதமான இந்து சமய பற்றுடையவர். சுமந்திரன் வரவோடு கிறிஸ்தவ மயப்பட முயற்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் வருகையால் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஆயினும், மதத்தை முன் வைத்து தமிழ்த் தேசிய அரசியல் நகர்வதென்பது தமிழினதுக்கு பேராபத்தானதுடன், தமிழர் அரசியை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கி நகர்த்துகிறது. இதற்கு விக்னேஸ்வரன் துணைபோய்விடக்கூடாது. நிற்க. விக்னேஸ்வரன்...

21 July 2013

குடிநீர் தேவைக்காக ஆழியார் அணை நாளை திறப்பு:

  முதல்அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் அணையின் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்காகவும் மற்றும் பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று ஆழியார் பழைய வாய்க்காலின்...

பொதுச் செயலர் ரமேஷ் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது -

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொதுச் செயலராக இருந்த சேலம் தணிக்கையாளர் ரமேஷ் சமூக விரோதிகளால் மிகக்கொடூரமாக கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும் அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோல கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது...

ஓ பிளேக்கின் பதவிக்கு இந்திய பெண் பரிந்துரை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் தலைவராக நிஷா பிஸ்வாலை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.பிஸ்வாலாவின் பரிந்துரை செனட் சபையினால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பணியகத்தின் தலைவராக இந்திய வம்சாவளி மற்றும் தெற்காசிய வலயத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான...

18 July 2013

உணவு விஷமானது: 20 பேர் பலி, 35 பேர் உயிருக்கு போராட்டம்

பீகார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு உயிரிழந்த மாணவர்களின் 20ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டம் தர்மாசதி கந்தாவான் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நேற்று மதியம் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயா பீன்ஸ் கலந்த மதிய உணவு வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்டதும் மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அனைவரையும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக சாப்ரா நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று...

சென்னை மாணவி தற்கொலை !பிரித்தானியாவில்

இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த ஜார்ஜினா என்ற 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்த அவர் கடந்த வியாழக்கிழமை மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜார்ஜினாவின் உடலை பெறுவதற்காக தந்தை தாம்சன் மற்றும் உறவினர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.அங்கு அவரது உடலை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும்...

17 July 2013

இந்தியாவில் அழுத்தம் கச்சதீவை மீளப் பெறுவது தொடர்பில்

கச்சதீவை மீளப் பெறுவது தொடர்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை அரசியலில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமான ஒன்றென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் கற்கைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க குறிப்பிட்டார். இந்தியாவுடன் சிறந்த உறவுகளைப் பேணும் பட்சத்தில் மாத்திரமே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான...

கைவிட்ட இந்திய விமானப் படை

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கரை தமது தூதராக நியமித்திருந்ததை இந்திய விமானப் படை தற்போது கைவிட்டிருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப் படையின் குரூப் கப்டனாக சிறப்பிக்கப்பட்டார். குரூப் கப்டன் பதவி என்பது விளையாட்டுத் துறையினருக்கான கெளரவ பதவியாகும். விளையாட்டுத் துறையைச் சேர்ந்த டெண்டுல்கருக்குத் தான் முதலில் குரூப் கப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. டெண்டுல்கர் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச ஒருநாள்...

கணவருடன் சேர்த்து வையுங்கள்: 2 குழந்தைகளுடன் பெண் ?

காதல் திருமணம் செய்த கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்கோட்டை அருகே உள்ள அருவங்காட்டையை சேர்ந்த காமராஜ் மகள் செல்வி(வயது 27). சேலம் மாவட்டம் முக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சரவணன்(வயது 30). அருவங்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சரவணன் சென்ற போது, செல்வியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் 2008ம் ஆண்டு ஜனவரி 18ல் திருமணம் செய்து சங்கராபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர். சென்னை...

16 July 2013

பார்களில் அழகிகள் குத்தாட்டம் போடலாம்: நீதிமன்றம் அனுமதி

மும்பை பார்களில் டிஸ்கோத்தே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இதற்கு எதிராக மும்பை பொலிசார் கடந்த 2005ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு...

15 July 2013

இளவரசன் உடல் இன்று மாலை அடக்கம்

தருமபுரி இளவரசனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இளவரசன் மர்மமான முறையில் தருமபுரி அரசு கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரை யாரோ கொலை செய்து விட்டதாகவும், முதலாவது பிரேத பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவரது பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று பரிசோதனை...

சிறுமியை காரை ஏற்றிக் கொன்ற நடிகர்

மதுரை மாவட்டத்தில் நடிகர் பாலசரவணன் என்பவர் 4 வயது சிறுமியை காரை ஏற்றிக் கொன்றது தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்த படத்தில் பரவையைச் சேர்ந்த பாலசரவணன் (வயது 26) என்பவர் நடித்து வருகிறார். இவர் குட்டிப்புலி என்ற படத்தில் பாலா என்ற பெயரில் நகைச்சுவை நடிகராக நடித்தவர். இந்த பகுதியில் நடந்த...

இந்திய இளைஞர் சுட்டுக் கொலை,,

மலேசியாவில் மர்மநபர்களால் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் பென்னாங்க் மாகாணத்தை சேர்ந்த இந்திய வம்சாவழி இளைஞர் எம்.ரவீந்திரன்(வயது 19). இவர் தனது சக நண்பர்களுடன் பட்டர்வொர்த் நகரில் உள்ள கோவில் வளாகத்தில் மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரவீந்திரன் இறந்தார். மேலும் உடன் நின்று கொண்டிருந்த 51 வயது முதியவர் ஒருவர், 18 வயது இளைஞர்...

12 July 2013

சிறீலங்காவிற்கு கடற்பல்லிகளை கடத்தியவர்கள் கைது!

தமிழ்நாடு இராமநாதபுரத்தில் இருந்து சிறீலங்காவிற்கு கடத்த முயன்ற இந்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடல் பல்லிகளை கியூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் குறித்த மூவர்களையும் கைதுசெய்துள்ளார்கள். இந்தியாவிலிருந்து சிறீலங்கா வழியாக சீனா மலேஷியா தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான உலரவைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீனவர்களால்...

கூடங்குளத்தில் மின் உற்பத்திக்கான முதல் கட்ட அனுமதி!

 தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான அனுமதியை வியாழக்கிழமை வழங்கியது. இதையடுத்து அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.தற்போது இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இன்னும் 45 நாட்களுக்குள் மின் உற்பத்தியை தொடங்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக அதன் இயக்குநர் ஆர்...

11 July 2013

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்: ??

 இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் தொடர்ச்சியாக முயற்சி காரணமாகவே இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, சேதுசமுத்திரத்...

இளவரசன் ரயிலில் அடிபட்டதை 2 பேர் நேரில் பார்த்தார்களா?

தருமபுரி இளவரசன் ரயிலில் அடிபட்டதை 2 பேர் நேரில் பார்த்ததாக புது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், அந்த இரண்டு பேரும் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இளவரசன் ரயிலில் அடிபட்டதை தாங்கள் நேரில் பார்த்ததாக அந்த இரண்டு பேரும் டேங்க் ஆபரேட்டரிடம் கூறினராம். இதையடுத்து அவர் தலையாரியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமனுக்குத் தகவல் போனதாம். ஜெயராமன், தனக்குக் கிடைத்த தகவலை அதியமான்கோட்டை...

10 July 2013

ஜியா கான் தற்கொலையின் போது போதையில் இருந்தார்: திடுக்கிடும் தகவல்

இந்தியில் பிரபல நடிகை ஜியா கான் தற்கொலை செய்வதற்கு முன்பு மது அருந்தியிருந்தார் என்று பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜியா கான் கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி...

மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட்

பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்திற்கு எதிராக வதோதரா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் நடனமாட மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டு இருந்தும், விழாவிற்கு வராமல் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளர் மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். கடந்த 7 ஆண்டுகளாக வதேதரா...

09 July 2013

ஆபத்தான நிலையில் பேருந்து பயணிகள்

 திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புச் சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பேருந்து பயணிகள் பயத்தில் உள்ளனர். சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட இந்த பகுதிக்கு செல்ல பண்ணாரியில் இருந்து 27 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து செல்லவேண்டும். இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை 209 என்பதால் இந்த வழியாக போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதில் 6,8,9,20,27 உள்ளிட்ட...

07 July 2013

வருகிற அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயர்கிறது?

பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செயுதுள்ளதால், வருகிற அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.   பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதோடு, டீசல் விலையும் மாதம் தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் பயணிகள், மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாய சூழலில் மத்திய அரசு உள்ளதாகவும் தெரிய வருகிறது. ரயில்வே...

06 July 2013

அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

  இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த, குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிதை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன் போது 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட...

05 July 2013

இளவரசனின் உருக்கமான காதல் கடிதம்

தருமபுரி காதல் ஜோடி மறைந்த இளவரசனின் சட்டைப்பையில் இருந்து 2 கடிதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவரது உடல் நேற்று தருமபுரி அரசு கல்லூரிக்கு பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது. அவரது சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்தது. அவற்றில் ஒன்று இளவரசன் தனது காதல் மனைவி திவ்யாவை பற்றி எழுதியது. மற்றொன்று திவ்யா இளவரசனுக்கு எழுதிய காதல் கடிதம். அதில் இளவரசன் எழுதியிருப்பதாவது, கடந்த 2010ம் ஆண்டில் திவ்யாவை நான் சந்தித்தேன். அப்போது அவர் ஐ லவ் யூ கூறினார். ஐனவரி...

என்.எல்.சி. பங்கு விற்பனை: சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதப் பங்குகளை விற்கும் முடிவினை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியகாந்திக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.   இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதப் பங்குகளை விற்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு...