This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 September 2013

குடியிருப்பில் சிக்கிய 42 பேர் சடலங்களாக மீட்பு! -

    மும்பையில் நேற்றுக் காலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 42 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.தெற்கு மும்பையில் மஷ்கான் என்ற இடத்தில் உள்ள இந்தக் கட்டடம் பிரிஹன் மும்பை மாநகராட்சிக்குச் சொந்தமானது. இதில் 21 குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.30 ஆண்டு பழமையான இந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக...

இலங்கை அரசு! சர்வாதிகாரப் போக்கிற்கு எடுத்துக்காட்டு

  - சர்வாதிகார போக்கிற்கு எடுத்துக் காட்டாக இலங்கை அரசு உள்ளது என்று தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யபட்ட விசைப்படகுகளை இலங்கை அரசின் சொத்தாக அங்குள்ள நீதிமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேலைபாய்ச்சுவது போல் உள்ளது. இதுபோன்ற செயல் சர்வாதிகார போக்கிற்கு எடுத்துக்காட்டாக இலங்கை அரசு உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என்று அவர் மேலும் கூறி...

28 September 2013

ரவுடி கழுத்து அறுத்து படுகொலை திருப்பத்தூர் அருகே

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கல்வெட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சோணைமுத்து. இவரது மகன் பாரிமன்னன் (வயது28), ஆட்டோ டிரைவர். இவர் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன. அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவனுக்கு முத்துமாரி (23), பிரவீனா (21) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் முத்துமாரிக்கு 2 குழந்தைகளும், பிரவீனாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். பல வழக்குகளில்...

சினிமா விழாவில் ரஜினி, கமலுக்கு அவமானமா?

  சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல் என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை 21ம் திகதி முதல் ஜெயல லிதா சென்னையில் தொடங்கிவைத்தார். நான்குலக சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த விழாவானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவ்விழா குறித்து கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர் போன்ற...

முதல்வர் ஜெயலலிதா உத்தரவு புதிய குடியிருப்புகள்:

 தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழுள்ள 3 ஆயிரத்து 500 குடியிருப்புகளுக்குப் பதில் ரூ.280 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலும் பழுதடைந்துள்ளன....

27 September 2013

அலுவலகத்துக்கு லீவு போட்ட ஊழியரை கொட்டிய மேலாளர் கைது

தமிழ்நாட்டில் பெண் ஊழியர் விடுமுறை எடுத்ததற்காக கோபப்பட்டு அவரை 3 முறை பலமாக குட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி ரோட்டில் கார்கோ இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு மேலாளராக இருப்பவர் ரவி சைதன்யா. இவருக்கு வயது 24தான் ஆகிறது. இதே நிறுவனத்தில் ரதி தேவி என்ற 23 வயது பெண் ஊழியர் பணியாற்றுகிறார். திருமணமாகாத இவர் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார்....

ஹாப்பி பர்த்டே கூகுள்: கோல் அடிச்சு ட்ரீட் வாங்குங்க!

கூகுள் நிறுவனம் தனது 15வது பிறந்தநாளை சுவாரஸ்யமான கூகுள் டூடுள் மூலம் கொண்டாடுகிறது. கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் கூகுள் தனது 15வது பிறந்தநாளை ஸ்வராஸ்யமான டூடுளுடன் கொண்டாடுகிறது. பிறந்தநாள் முன்னிட்டு கூகுளும் நமக்கு சாக்லேட் கொடுக்கிறது ஆனால் டூடுள் மூலம். இன்றைய டூடுளில் ஜி ஓ ஓ ஜி எல் இ ஆகிய எழுத்துக்கள் நகரும் தன்மையுடனவாக உள்ளன. கூகுளில்(GOOGLE) உள்ள இரண்டாவது ஓ கேக் வடிவத்தில் உள்ளது. கேக்கின் மேல்...

குற்றவாளிகளை ஜெயிலில் சந்தித்த

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை தனது மனைவியுடன் சந்தித்துள்ளார் சீமான். பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி...

25 September 2013

ரூ.58 ஆயிரம் கோடி செலவு செய்துள்ள இந்தியா :

 இலங்கையின் மறு சீரமைப்பு பணிக்காக இந்தியா ரூ.58 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய தொழில் வர்த்தக துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது: தோல் கழிவுநீரினால் ஏற்படும் பாதிப்புகளை தீர்ப்பதற்காக மத்திய அரசின் மூலம்...

பா.ம.க-விடுதலை சிறுத்தைகள் மோதல் : போலீஸ் துப்பாக்கி சூடு

 புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்-  பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்....

24 September 2013

விடுதலை35 தமிழிக மீனவர்கள் !

 இந்திய மீனவர்கள் 35 பேர்  திங்கட்கிழமை புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்கா கடற் பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்கள் அனைவரையும் விதலை  செய்யுமாறு புத்தளம் நீதவான் உத்தரவிட்டார்.எனினும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள்...

23 September 2013

தமிழக மீனவர்கள் 20 பேருக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை சிறை

 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 20 தமிழக மீனவர்களுக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை சிறை என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் நேற்று 20 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அக்டோபர் 7ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டதை அடுத்து,...

மரண தண்டனை இன்று உறுதி? பலாத்கார குற்றவாளிகளின்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்வது குறித்த விசாரணையை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் துவங்குகிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் உயிர் இழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் மைனர் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இதில் மைனருக்கு சிறார் நீதிமன்றம்...

மட்முட்டியா?பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் பரபரப்பு

 மளையாள நடிகர் மம்முட்டி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார் என்ற செய்திகள் கேரள அரசியலலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவின் மெகாஸ்டார் மம்முட்டி அரசியலில் குதிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி மலையாள சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் கேரள அரசியல் பிரமுகர்களிடையேயும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாம். இதுகுறித்து மம்முட்டி அளித்த பேட்டியில், தற்போது வந்திருக்கும் செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்...

22 September 2013

தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டலாம் :

  நடைபெற்ற தேர்தலின் மூலம், தமிழர்களுக்கு அரசியலில் முழு அதிகாரம் கிடைக்கும் என இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். மேலும், இந்தத் தேர்தல் அகதிகளாக உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசியல் சாசனப்படி, ராஜீவ்-­...

லண்டன் விமான நிலையத்தில் பாபா ராம்தேவிடம்

   போலீசார் 8 மணி நேர தீவிர விசாரணை!  ..லண்டனுக்குச் சென்று இருந்த யோகா குரு பாபா ராம்தேவிடம், லண்டன் விமான நிலையத்தில் வைத்து பிரிட்டன் போலீசார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.  பாபா ராம்தேவ், லண்டனில் நடக்க உள்ள விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சொற்பொழிவாற்றவே அங்கு புறப்பட்டுச் சென்றார். அவர் கையில் சிறு கைப்பை மட்டுமே வைத்திருந்தார். இந்நிலையில், அவரை லண்டன் போலீசார் சுமார் 8 மணி நேரம் தீவிர...

கருணாநிதி திட்டம் கூட்டணி லாபம், நஷ்டம்: சர்வே எடுக்க

    பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, திராவிட கட்சிகள் விருப்பம் காட்டத் துவங்கியுள்ளன. தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்தால், தி.மு.க.,வுக்கு கிடைக்கக் கூடிய லாபம், நஷ்டம் குறித்து, "சர்வே' எடுக்க, தி.மு.க, தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மோடியின் பிறந்ததினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்கவில்லை. இடதுசாரி கட்சிகளின் தலைவர்களான...

21 September 2013

தீவிரவாதி முஜாகிதீன் தப்பியோட்டம்: பொலிசார் காரணமா?

அகமதாபாத் குண்டிவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தப்பியோடிதால் மும்பை முழுவதும் தேடுதல் வேட்டையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தொடர்  குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த பயங்கரம் நடந்த மறுநாள், சூரத் நகரில் 22 குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்ட இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி...

தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் ஐதராபாத்தில் அமைக்க

 ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், பிரம்மாண்டமான, தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மண்டலத்தில், 2.20 லட்சம் கோடி ரூபாய் வரை, முதலீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.  தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம்:   பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று டில்லியில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில், ஐதராபாத்தில், பிரமாண்டமான...

20 September 2013

தேர்தலில் பா.ஜ., செல்வாக்கு; 4 மாநிலங்களில் 3 -ஐ கைப்பற்றும்

                                        வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் 3 - பா.ஜ., கைப்பற்றும் என்றும் டில்லியில் காங்., அரசுக்கும் ,பா.ஜ.வுக்கும் கடும் போட்டி இருந்தும் இரண்டு கட்டசிகளும் சம அளவில் வெற்றி பெற்று இங்கு தொங்கு சட்டசபையே அமைய...

சுவர் இடிந்து விழுந்து திருச்சியில் இருவர் பலி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது, அப்பகுதிக்கு அருகே இருந்த ஒரு விடுதியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண் தொழிலாளர்கள் பலியாயினர்.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கல்லூரி இருக்கும் சாலையில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று காலை கட்டடத்துக்கு அடிக்கல் வைக்க பள்ளம் தோண்டும் பணியில் 11 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.  அப்போது, அவ்விடத்துக்கு...

முறைகேட்டில் ஷிண்டேவுக்கு தொடர்பில்லை: சிபிஐ நற்சான்று

 ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.  ராணுவத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 மாடிகள் கொண்ட ஆதர்ஷ் கட்டடத்தில் தனது பினாமிகளுக்கு வீடுகளைப் பெற்றுத் தந்தார் ஷிண்டே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சமூக சேவகர் பிரவீண் வடேகோவன்கர்...

18 September 2013

மனித உருவில் ஆன ரோபோ உருவாக்கம்

பலவிதமான வடிவங்களில் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது மனித உருவில் ஆன 'ரோபோ' உருவாக்கப்பட்டுள்ளது.'டெர்மினேட்டர்–2' படத்தில் ஹொலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் எந்திரமனிதனாக நடித்து இருப்பார். அதுபோன்ற அமைப்பிலான மனித ரோபோ ஆக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது உடலில் காயங்களோ அல்லது கோளோரோ ஏற்பட்டால் அதை அந்த ரோபோவே 2 மணி நேரத்தில் சரி செய்து கொள்ளும் திறன் படைத்தது. இதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்....

ஏழைகளுக்காகவே செயலாற்றுகிறது காங்கிரஸ்:

  பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடியை மறைமுகமாகத் தாக்கிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, எதிர்கட்சியினர் பணக்காரர்களுக்காக பணியாற்றுகிறது என்றும், தமது கட்சியோ ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களது கனவுகளை நனவாக்குவதற்குமே செயலாற்றுகிறது என்றும் கூறினார்.  சட்டமன்றத் தேர்தலையொட்டி, ராஜஸ்தானின் பரன் பகுதியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசுகையில், “உங்கள் குழந்தைகள் மிகப் பெரிய கனவுகளைக் காணவே நாம் விரும்புகிறோம்....

16 September 2013

தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சின்- ஷாருக்கானை அழைக்கும்

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை அழைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிரச்சாரத்திற்கு அழைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான முகமது அசாருதீன் மூலம் சச்சினை...

நடிகர் சோ ஜெயலலிதாவுடன் திடீர் சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, துக்கள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான சோ திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் அரை மணி நேரம் நீடித்த சந்திப்பின் போது பிரதமர் வேட்பாளராக மோடியின் பிறந்தநாளையொட்டி (17ம் திகதி) அவருக்கு அட்வான்ஸ் பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகளை...

இந்திய எல்லையில் இன்று காலை ..

 ..  இந்திய எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதையடுத்து அங்கு நிலை கொண்டுள்ள இந்திய ராணுவ வீரர்களும் திருப்பிச் சுட்டனர். காலை 6.30 மணிக்கு, ஜம்மு-காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மெந்தார் பிரிவில் தாரி டாப்சி என்ற இடத்தில் உள்ள பில்லி மற்றும் நோவல் ஆகிய எல்லை பகுதிகளிலேயே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர்...

15 September 2013

மாணவியை மனைவியாக்கிய ஆசிரியர் !!

தமிழ்நாட்டில் தன்னிடம் படித்த மாணவியின் திருமணத்தை நிறுத்துவதற்காக அவரை மனைவி என்று ஆசிரியர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை சுண்ணாம்பிருப்பை சேர்ந்த மகேந்திரன். இவர் உச்சநீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் நானும், ஜெயராமன் மகள் மகாலட்சுமியும் காதலித்தோம். இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு ஜெயராமன் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்ப்பை மீறி இருவரும், திருப்பத்தூர் பூமாயி அம்மன்...

விரைவில் சீரடையும்:இந்திய பொருளாதாரம் பிரணாப் முகர்ஜி

ஜனாபதி பிரணாப் முகர்ஜி, தனது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சென்றார்.தனி விமானத்தில் கொல்கத்தா சென்று இறங்கிய அவரை விமான நிலையத்தில் மாநில கவர்னர் எம்.கே. நாராயணன், மாநில மந்திரிகள், உயர் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். கவர்னர் மாளிகையில் அவரை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை. கொல்கத்தாவில்...

விலையில் வெளுத்துக் கட்டும் மல்லிகை

சுபமுகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ கிலோ 600க்கு விற்பனை செய்யப்பட்டது. சுபமுகூர்த்தம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்தது. நாளை 16ம் திகதி சுபமுகூர்த்த தினம். அன்று நாடு முழுவதும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். நேற்று சேலம் வ.உ.சி. பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மல்லிகை, முல்லை,...

உயர்ந்துள்ள விமானப் பயணக் கட்டணம் கடந்த மூன்று !!

கடந்த இரண்டு வாரங்களாக விமானப் பயணக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றன. சென்ற மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு 55 சதவிகிதம் கட்டண உயர்வுகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று மாதம் முன்னதாகப் பதிவு செய்யப்படும் பிரிவு முதல் ஒரு வாரம் முன்னதாகப் பதிவு செய்யப்படும் பிரிவு வரை இருக்கும் ஆறு பிரிவுகளிலும் அதிகரித்துள்ள கட்டணத்தொகை குறித்த கணக்கீடுகளை நேற்று இணையதளத் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்களையும்...

ஆயுதங்கள் மீட்பு பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல்:

  ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம் போடியா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை அதிகாலை நடத்திய அதிரடித் தாக்குதலில் பெண் உள்பட 13 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது என்றும், மாவோயிஸ்டுகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 25-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம்,...

14 September 2013

: மன்மோகனுக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய ஜெயலலிதா

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 97 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளதாவது: தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கும்போது அவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சித்ரவதை செய்வதும் மற்றும் கைது செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை...

வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்:

 தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தனது சொத்து, தனிப்பட்ட விவரங்கள், குற்றப் பின்னணி போன்ற விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்தால், அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  இது தொடர்பாக "ரிசர்ஜன்ஸ் இந்தியா' என்ற அரசு சாரா அமைப்பு 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.  "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் வேட்பு மனுவில் தங்கள் பின்னணி, சொத்து...

இருளில் மூழ்கும் அபாயம்:மின்துறை ஊழியர்கள் !

 ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முதல் ஆந்திர மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆந்திரா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவை இரண்டாகப் பிரித்துத், தனி தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, சீமாந்திரா, ராயல சீமா ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. அரசு ஊழியர்களுடன் தற்போது மின் துறை ஊழியர்களும் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால்,...

செய்தித்தாள் மற்றும் காகித ஆலை

(   TNPL)யின் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்க! - வைகோ கோரிக்கை கரூர் மாவட்டம் புகளூரில் 1979 இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TNPL), 1984 ஆம் ஆண்டு முதல் அதன் உற்பத்தியைத் தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 300 டன் உற்பத்தியில் தொடங்கிய ஆலை, இன்று நாள் ஒன்றுக்கு 1200 டன் என்ற அளவில் உற்பத்தி செய்யும் அளவில் வளர்ந்துள்ளது. இந்த ஆலை இதன் உற்பத்தியில் 20 சதவிகிதத்தை 50...

12 September 2013

அதிரடி உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு

டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் ரூ. 68 ஆக சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு புதிய ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன் வெளியிட்ட சில அறிவிப்புகளால் சரிவில் இருந்து மீண்டு 65-யை எட்டியது. இந்நிலையில் நேற்று ரூபாயின் மதிப்பு 63 ஆக உயர்ந்தது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ரகுராம் ராஜன் வெளியிட்ட அறிவிப்புகள் காரணமாக ரூபாயின் மதிப்பு கடந்த 5 நாட்களில் மட்டும் 8 ரூபாய் அதிகரித்துள்ளது....

இந்தியா மீது மும்முனைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்கா!

வங்க தேசத்தவர்கள் மீது, பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் ஆதரவு வழங்கியிருந்தார் . அப்போதைய இந்திய பிரதமர் இந்திராவின் அதிரடி நடவடிக்கைகளால் மிரண்டு போன அமெரிக்கா, இந்தியா மீது மும்முனை தாக்குதல் நடத்த திட்டமிட்டது' என பிரபல வரலாற்று அறிஞர், கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. வரலாற்று ஆசிரியர் கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளதாவது: பாகிஸ்தான், 40 ஆண்டுகளுக்கு முன்,...

பிடிவாரன்ட் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு..

. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், புதன்கிழமை ஆஜராகாத அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் அக்கட்சியின் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய விஜயகாந்த், தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்...

11 September 2013

மாணவி பலாத்கார வழக்கு : நால்வரும் தீர்ப்பு

 டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, நான்கு பேர் மீதான குற்றங்களும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளிகள்' என, டில்லி விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாடு ழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கிய இந்த வழக்கில், ஒன்பது மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை, பலரும் வரவேற்றுள்ளனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது....

சுற்றுலா தலங்களை மேம்படுத்த முதல்வர் உத்தரவு

 தமிழகத்தில் சுற்றுலாத் துறையை வளர்க்கவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பச்சமலை, முத்துப்பேட்டை ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுற்றுலா நேரடி வேலை வாய்ப்பினை உருவாக்குவதோடு, அதன் மறைமுக தாக்கமாக உள்ளுர் மக்களின் மேம்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. நாட்டின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பதிலும், மாணவ, மாணவியரிடையே சிந்தனை...