This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 May 2013

தேர்வில் முதல் இடத்தை 9 மாணவிகள்??

தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்....

25 May 2013

திரு,டி.எம்.செளந்தரராஜன் காலமானார்,

  மிழ் திரையுலகின் பிபரல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 91. சுவாசக் கோளாறு காரணமாக சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிறபகல் 3.50 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. 1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தார் செளாந்தர ராஜன். திருவிளையாடல், பலே பாண்டியா, அம்பிகாபதி,...

மேயரை சந்திக்க முடியாது: செக்ஸ் அடிமைகள் ?

போரின் போது களைப்படைந்த வீரர்களுக்கு பெண் செக்ஸ் அடிமைகள் தேவை என்று ஜப்பானின் ஒசாகா நகர மேயர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானின் ஒசாகா நகர மேயராக இருப்பவர் டோரு ஹஷிமோடோ, மறு சீரமைப்பு கட்சியைச் சேர்ந்தவர். இவர், போரின் போது தென் கொரியாவைச் சேர்ந்த பெண்கள் பலரை செக்ஸ் அடிமைகளாக, ஜப்பான் இராணுவத்தினர் வைத்திருந்த தகவலை பெருமையாக குறிப்பிட்டார்.இதற்கு தென் கொரியாவைச் சேர்ந்த அப்போதைய செக்ஸ் அடிமைப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,...

24 May 2013

56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகிறார்கள்

சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகிறார்கள் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.இன்று சவுதி செல்லும் சல்மான் குர்ஷித், டெல்லியில் நேற்று உருது பத்திரிகை ஆசியர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் பேசியதாவது:சவுதியில் இருந்து இன்னும் 1 1/2 மாதத்தில் 56,700 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்புகின்றனர். இவர்களிடம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட், விசா இல்லாததால் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்க...

துப்பாக்கியுடன் சினிமா பைனான்சியர் /

 சென்னை கீழ்ப்பாக்கத்தில் சினிமா பைனான்சியர் விஜயகர் துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்து 10 மணி நேரம் பொதுமக்களையும், பொலிஸாரையும் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சப்த மாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விஜயகர், கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார்.இதனால், கோபமடைந்த வீட்டு உரிமையாளரும், குடியிருப்பு வளாக நல சங்கத்தினரும் விஜயகரை, வீட்டை...

என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல்"

என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார். அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சியினர்...

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு ??

 மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரபலமான பெண் அழகுக் கலை நிபுணரும், தொழிலதிபருமான சோசிலாவதி லாவியா உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது. அக்கொலை வழக்கில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூருக்கு...

23 May 2013

குறுவைச் சாகுபடி பொய்க்கும் அபாயஎச்சரிக்கை

காவிரி டெல்டா பகுதிகுகளில் இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடி பொய்க்கக்கூடிய சூழல் நிலவுவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:அதிமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சர்களிடம் கேட்டால், சந்தையில் விலை உயர்ந்தால்தான் வீட்டில் யாரும் சமைக்காமல் அம்மா உணவகங்களில் சாப்பிட வருவார்கள் என்று கூறுவர்.அதிமுக தேர்தல் அறிக்கையில் 58 வயதுக்கு மேற்பட்ட...

பல்கலைக்கழக புதிய துணைவேந்தர்

                              அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.ராஜாராம் (55) நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, வேலூரில் உள்ள தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக இவர் பணிபுரிந்துள்ளார். கம்ப்யூட்டர்...

22 May 2013

அடுத்த மாதம் மினி பஸ்கள் ஓடும் ,,அடுத்த மாதம் மினி பஸ்கள் ஓடும் தகவல்

சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு மினி பஸ் விடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையொட்டி முதலில் 100 மினி பஸ்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மினி பஸ்களை கட்டமைப்பதற்கான நிறுவனத்தை ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யும் பணியை சாலைப் போக்குவரத்து நிறுவனம் (ஐஆர்.டி.) மேற்கொண்டது. இதன் அடிப்படையில் மினி பஸ்களுக்கான 'சேசிஸ்' தயாரிக்கும் ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம்...

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ?? :

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 4 ஆண்டுகள் நிறைவையொட்டி பாராளுமன்ற பொது விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-  தேர்தல் எப்போது நடைபெற வேண்டுமோ அப்போது நடைபெறும். தற்போதைய சூழ்நிலையில், முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்தவும் எந்தத் தேவையும் எழவில்லை. கூட்டணிக் கட்சியினர் சொல்வதை எல்லாம் அரசால் செய்ய இயலாமல் போகலாம். மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களை மையப்படுத்தியே...

தமிழர் பிரச்சினையை முன்வைத்து சில கட்சிகள் அரசியல் பிழைப்பு

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு மத்திய மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-ராஜீவ்காந்தி நம்மோடு இருந்திருந்தால் இந்தியா சீனாவை தாண்டி வளர்ச்சி பெற்று இருக்கும். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தினார். அனைத்து கட்சிகள் வித்தியாசமின்றி வரவேற்று கைதட்டினார்கள். துரதிர்ஷ்டவமாக அவரை இழந்து விட்டோம்.பஞ்சாயத்து...

21 May 2013

கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை

பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர்.குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் விவாகரத்தான இவருக்கு குழந்தைகளிடமும் அன்பாக இருக்கத் தெரியவில்லை. எனவே நீதிமன்றம் இவரை வேறொருவர் முன்னிலையில் தான் தன் குழந்தைகளைப் பார்த்துப் பேச வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவால் மனம்...

20 May 2013

4 1/2 கோடி ரூபா வைரம் திருட்டு : மும்பை விமான.,.

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபார நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை பட்டை தீட்டுவதற்காக பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பி வைத்தது. 24 பொட்டலங்களாக தனியார் கொரியர் மூலம் அனுப்பப்பட்ட வைரம் மும்பையில் இருந்து விமானத்தில் ஏற்றப்பட்டது. அப்போது, விமான நிலையத்தில் சரக்குகளை அடையாளம் தெரியாத ஒருவர், யாரும் கவனிக்காத நேரத்தில் ஒரு வைர பொட்டலத்தை திருடிச் சென்று விட்டார். களவுப் போன வைரத்தின் இந்திய மதிப்பு ரூ. 4 1/2 கோடி என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம்...

புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன ?

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. கதிரியக்கத்தின் வாயிலாக கண்டுபிடிக்க முடியாத உள்ளார்ந்த புற்றின் வளர்ச்சியை கூட இந்த அமுலெட் கருவி வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும். இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 30 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் இருந்த நவீன கருகி மிகப்பெரிய வரப்பிரசாதமாக...

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம ,,,,

திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள அகர்தலா நகரில் 'தைனிக் ஞானதூத்' என்ற நாளிதழ் அலுவலகம் உள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தரை தளத்தில் பணியிலிருந்த 'புரூஃப் ரீடர்' மற்றும் டிரைவர் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இச்சம்பவத்தை பார்த்த நிருபர் ஒருவர் மயங்கி விழுந்ததால்...

ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த?

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 3 வீரர்களையும் டெல்லி பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் 3 வீரர்களையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி ரவிசவானி தலைமையிலான...

19 May 2013

புதிய அமைச்சர்களாக 28 பேர் பதவி ஏற்றனர்,,

  கர்நாடக சட்டசபை தேர்தலில் தனி பெரும்பான்மையாக காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையா கடந்த 12ஆம் தேதி பதவி ஏற்றார். அப்போது அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பிறகே அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கபப்ட்டது. அதன்படி, அமைச்சர்கள் படியலுக்கு சோனியா காந்தி அனுமதி அளித்தப் பிறகு பெங்களூர் திரும்பிய, சித்தராமையா அமைச்சர்கள்...

தமிழர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்

   நாம் தமிழர் கடலூரில் நடத்தும் பொது கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணி நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்...

17 May 2013

மதுபான கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்

குடிகார கணவர்களின் தொல்லை தாங்காத பெண்கள் மதுபான கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜரகா பஜார் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் ஊரிலும், அருகேயுள்ள பகுதிகளிலும் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர், பொலிஸ் கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரிடமும் மனுக் கொடுத்தனர். அதற்கு எந்த பலனும் இல்லை. இந்நிலையில், ஜரகா பஜார் கிராமத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர் உட்பட, ஏராளமான பெண்கள்...

குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு குப்பைத் தொட்டியில், மாநகராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளை லொறியில் ஏற்றி கொண்டு செல்வது வழக்கம். இன்று காலை 9.40 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் மர்ம ஆசாமிகள் யாரோ வைத்திருந்த நாட்டு...

புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அதனால் இந்திய விமானப் படையின் புதிய விமான தளம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரும் 27ம் திகதி நடைபெறுகிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார். இப்போது திறக்கப்பட்டாலும் இந்த விமான தளம் முழு அளவில் தயாராக 5 ஆண்டுகளாகும். தஞ்சாவூர் விமானப்படை தளம் முழு அளவில் தயாரானவுடன் 16 முதல் 18 சூப்பர்...

ஒன்றுக்கும் மேற்பட்ட காஸ் இணைப்பு:

ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு ஜூன் 1ம் திகதியில் இருந்து சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளவர்களில் உண்மையான வாடிக்கையாளர்களை கண்டறிய, "உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்” என்ற கே.ஒய்.சி நடைமுறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இதன்படி காஸ் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் காஸ் இணைப்பு...

15 May 2013

புதை மணலில் சிக்கி 2 இந்தியர் பலி..!

அபுதாபியில் உள்ள அல் ஜப்ரானியா பகுதியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை அங்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த ராம்குமார் (35), செல்வராஜ்(28) ஆகியோர் அப்பகுதியில் உள்ள புதை மணலில் சிக்கி புதையுண்டனர். மற்ற தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அல் மக்காம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு...

ஐ.பி.எல். சூதாட்டத்தில் வீட்டை இழந்த வாலிபர்

  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெறும் வீரர்கள் யார், ஒரு அணியின் ஸ்கோர், வீரர்களின் சிக்சர், கைப்பற்றும் விக்கெட் என்று பல்வேறு வகையில் ஐ.பி.எல். பெட்டிங் (பந்தயம்) நடக்கிறது. பணம் வைத்து நடத்தப் படும் இந்த பெட்டிங்குக்கு...

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக ஐகோர்ட்டில் புகார் மனு

தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் திரைப்பட வளர்ச்சிக்காகவும், திரையரங்க உரிமையாளர்களின் நன்மைக்காகவும் எங்கள் சங்கம் பாடுபட்டு வருகிறது. கமலஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் விஸ்வரூபம் என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை 11-1-2013 அன்று திரையரங்குகளிலும் டி.டி.எச்சிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவதாக கமலஹாசன் அறிவித்தார்....

கால் அமுக்க செய்த பள்ளி ஆசிரியர்:

ஜம்மு– காஷ்மீரில் மாணவர்களை கால் அமுக்கச் செய்த ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கிர்ராம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பஷீர் அகமது பட். இவர் நாற்காலியில் அமர்ந்து மாணவர்களை கால் அமுக்கச் செய்து அதில் சுகம் கண்டது தொடர்பான புகைப்படம், சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியானது. ஆசிரியரின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துவதற்காக பள்ளி உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புகைப்படத்தை...

3 வயது மகளுடன் வீதியில் வசிக்கும் தந்தை

இந்தியாவை சேர்ந்த நபரொருவர் தன்னுடைய 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட், இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார். இதற்கிடையில் பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருக்கு கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை வாங்கி தரும் தரகராக சிக்கந்தர் சாம்ராட்டும் பஹ்ரைனில் தங்கி தொழில் செய்து வந்தார். திடீரென இவரது தொழில் கூட்டாளி சுமார் 65 ஆயிரம் பஹ்ரைன்...

14 May 2013

சுயமரியாதைக்காக காதலியை இழந்தவன்

 இதுவரையிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வடசென்னை ராயபுரம் பகுதி திமுக பிரதிநிதி வை.நான்குட்டி மகன் கரிகாலன், பிரவிணா திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி வைத்தார். அப்போது கருணாநிதி பேசியதாவது, இன்றைக்கு மே 14. இதே நாளில், செப்டம்பரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு என் திருமணம் நடைபெற்றது. கோபாலபுரம் இல்லத்தில் மாத்திரம் இதுவரை நடைபெற்ற...

கவர்னர் ரோசய்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த பெண்.,

தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பத்மராவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயா விந்தியால், இவர் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பின் பொதுச் செயலராக உள்ளார். இந்நிலையில் சிரளா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் கிருஷ்ண மோகன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருகிறார், பலரது நிலங்களை...

பெண் குழந்தையை திருடி விற்ற பெண் ஊழியர் ,.

ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஹக்கீம் (வயது 34). இவரது மனைவி மும்தாஜ் (29). இந்த தம்பதியினருக்கு அப்துல்ரசீத் (6) என்ற ஒரு மகன் உள்ளான். இதற்கிடையே மும்தாஜ் மீண்டும் கர்ப்பிணி ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மும்தாஜ் கடந்த 9-ந்தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 10-ந்தேதி ஆஸ்பத்திரியில் மும்தாஜிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் 'இன்குபேட்டர்' வார்டில்...

13 May 2013

ஜெயலலிதா, சோனியா பாதுகாப்பிற்கென சிறப்பு ?

வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களில் தற்போது 35 பெண் கமாண்டோக்களே உள்ளனர். இவர்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதால் வி.வி.ஐ. பி.க்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சோனியா மற்றும் பிரியங்கா ஆகிய...

முதல் மந்திரியாக இன்று பதவி ஏற்கவுள்ளார்

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். கர்நாடகத்தில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மைசூர் மாவட்டம் பிரியபட்டணா தொகுதி நீங்கலாக இதர 223 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா 40 தொகுதிகளிலும், கர்நாடக ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும்...

அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மன்னிப்பு

தென்கொரிய ஜனாதிபதியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஜனாதிபதி அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பார்க் முதன்முறையாக கடந்த வாரம் (மே 5 - 9) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் போது, அவருடன் சென்றிருந்த செய்தித் தொடர்பாளர் யூன் சாங்-ஜங், கொரிய அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நாடு திரும்புவதற்கு முன்பே யூன்...

கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறைத்

பிரிட்டனில் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.இதன் மூலம் கவுரவக் கொலைகளை தடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. பல நாட்டு மக்கள் வசிக்கும் பிரிட்டனில் குடும்ப கவுரவத்துக்காக இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். அது மட்டுமின்றி மதம், ஜாதி மாறி காதலிப்பவர்களை கவுரவ கொலைகளும் செய்து விடுகின்றனர். இவற்றை தடுக்க பிரிட்டன் அரசு தீவிர...

10 May 2013

முதல்வராக சித்தராமையா தெரிவு செய்யப்பட்டார்.

 கர்நாடகாவில் கடந்த 5ம் திகதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை உண்மை என நிரூபிக்கும் வகையில், தேர்தல் நடந்த 223 தொகுதிகளில் 121 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பின் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அந்தக் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தாலும்...

கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு வீட்டு முன்பு திண்ணையில் தூங்கிய போது கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். ராமுவின் இறுதிச் சடங்கு நடந்த போது அவரது மனைவி ரதியின் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த கள்ளக் காதலன் ராஜசேகரனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து...

மோசடி ஸ்டாராக மாறிய பவர் ஸ்டார்! புகார்கள்

 மோசடி வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவருக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமாற்றினார் பவர் ஸ்டார். இதையடுத்து ரங்கநாதன் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில், பவர் ஸ்டார் கடந்த 26ம் திகதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு வேலூர் சிறைக்கு...

கற்பழிக்கப்பட்ட பெண் மனமுடைந்து

தன்னுடைய சகோதரியை கூடப் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் புகார் கூறியும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்யாததால் மனம் உடைந்து போன அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பெண் தனது 30 வயது தங்கையுடன் குவாலியரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவரது அண்ணன் லக்கான் பதாம் வீட்டுக்கு வந்துள்ளார். தன்னுடன் சொந்த வீட்டுக்கு வந்து விடுமாறு...

புதிய முதலமைச்சர் யார்? இன்று கூட்டம் நடைபெறுகிறது

கர்நாடக புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 224 இடங்களில் அந்த கட்சிக்கு 121 இடங்கள் கிடைத்துள்ளன. சட்டசபை காங்கிரஸ் தலைவரை (முதல்-மந்திரி) தேர்ந்தெடுப்பதற்காக, புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பிற்பகலில் பெங்களூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக்...

09 May 2013

இந்திய ஜ.டி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா

அமெரிக்க குடியேற்ற சீர்திருத்த மசோதாவை எட்டு அமெரிக்க செனட்டர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த மசோதாவில் மிகப் பெரிய இந்திய நிறுவனங்களின் நலன்களுக்கு எதிராக முக்கியமான எட்டு அம்சங்கள் உள்ளன. இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தீங்காக அமையும். “எட்டு பேர் கும்பல்" என அறியப்படும் இந்த செனட்டர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா அதிபர் கையெழுத்தின் மூலம் சட்டமாக மாறும் பொழுது, இந்திய ஐடி நிறுவனங்கள்...

நிலக்கரி ஊழலில் வசமாக மாட்டிய மன்மோகன் சிங்

பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் மீது நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சித்திருப்பது அவருக்கு நெருக்கடியினை அதிகரித்திருப்பதாக கருதப்படுகின்றது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தொடர்பிருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளில் புகார் தெரிவித்துள்ளன.இதில் குற்றம்சாட்டப்பட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் கூட பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்று கை நீட்டிக்...

பாகிஸ்தான் கைதி சனாவுல்லா உயிரிழந்தார்

ஜம்மு சிறையில் சக கைதி ஒருவரால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாவுல்லா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். பாகிஸ்தான் கைதி சனாவுல்லா கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், அங்கிருந்த கைதிகளால் தாக்கப்பட்டதில் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். அதன் எதிரொலியாக,...

07 May 2013

பாகிஸ்தானியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம்

 இந்தியாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்தியப் பயணத்தின்போது மிகவும் கவனமாக இருக்குமாறு தனது நாட்டு மக்களை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குப் போக திட்டமிட்டால் அங்கு கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அரசு அறிவுறுத்துகிறது.மேலும் அங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. எனவே இந்தியாவில்...

இரண்டு இந்தியப் பெண்களுக்கு அமெரிக்காவில் ,

  அமெரிக்காவில், சமூகத்தில் உள்ளவர்களை மேம்படுத்த அசாதாரண செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களை அடையாளம் கண்டு கவுரவிக்கும் விதமாக ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுறது.இந்த ஆண்டு 15 அமெரிக்க வாழ் ஆசிய பெண்களுக்கு சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் என்ற பட்டதை வழங்கி கவுரவித்தது. இதில் இரண்டு பேர் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் ஆவார்கள்.இந்த நிகழ்ச்சி நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் அட்லாண்டாவைச் சேர்ந்த அபர்ணா பட்டாச்சாரியா,...

அணு உலையை மூடும் வரை தொடர் போராட்டம்,.=, :

. இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் எந்த பகுதியிலும் இந்த...

06 May 2013

மாணவி கொலை வழக்கு: மாத இறுதியில் தீர்ப்பு"

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தனது ஆண் நண்பருடன் சென்ற 23வயது மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்சிங் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கைதான 5 பேர் டெல்லி திகார் ஜெயிலிலும், 18 வயதுக்கு குறைவான ஒரு நபர் மட்டும் சிறார் ஜெயிலிலும்...

அணு உலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

 கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை உடனே நிறுத்த கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.கூடங்குளம் அணுமின் நிலைய அணுக்கழிவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனுதாரர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.மேலும் பாதுகாப்பு விதிகளை முறையாக செயல்படுத்தும்வரை அணு உலையை இயக்கத் தடை விதிக்கவும்...

சிறையில் இந்திய கைதிகள் மனநோயாளிகள்: அதிர்ச்சி

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கைதி சரப்ஜித் சிங், கடந்த வாரம் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.ஜின்னா மருத்துவமனையில் 'கோமா' நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 2ம் திகதி மரணமடைந்தார். இந்நிலையில், சரப்ஜித் சிங் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோட் லக்பத் சிறையில் உள்ள 36 இந்திய கைதிகளில் 20 பேர் மனநோயாளிகளாக உள்ளனர் என்னும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான்...