பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவரை கற்பழித்ததற்காக 25 வயது இந்திய மாணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனில் படித்து வருகின்ற இந்தியாவை சேர்ந்த சோபி ஜான்(25) என்பவர் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேர போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
பின்னர் அவர் ஹோட்டல் அறைக்கு சென்று போதையில் நன்கு தூங்கியுள்ளார். அப்போது சோபி வேறு ஒரு ஊழியரின் கீ கார்டை பயன்படுத்தி நடிகையின் அறைக்குள் சென்று அவரை கற்பழித்துள்ளார்.
மேலும் அவர் அந்த நடிகையை புகைப்படமும் எடுத்துள்ளார். இது குறித்த வழக்கு சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி ஆலிஸ்டர் மெக்ரீத் முன்னர் நடைபெற்றது. வழக்கை விசாரித்த அவர் சோபி ஜானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சோபி பிரிட்டனில் சிறை தண்டனைக்கான காலத்தை கழித்த பின்னர் தான் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்.
0 கருத்துகள்:
Post a Comment