Search This Blog n

10 April 2013

சிசுவின் சடலம் புத்தூர் மேற்கில் மீட்பு???

 புத்தூர் மேற்கில் உயிரிழந்த 7 மாதக் குழந்தையின் சடலம் உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்ப டாமல் மயானத்தில் புதைக் கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அச்சுவேலிப் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

புத்தூர் மேற்கைச் சேர்ந்த அன்ரன் ஜெனித்தாஸ் தனுஷன் (வயது 07 மாதம்) என்ற குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. “குறித்த குழந்தையின் தாய் கணவரைப் பிரிந்து மிக வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
இதன் போது குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்காமல் ஆலயத்துக்கு நேர்த்தி வைத்துவிட்டு தாயார் அலட்சியமாக இருந்ததால் குழந்தை உயிரிழக்க நேரிட்டது. இதன் பின்னர் சடலத்தை உரிய விசாரணைக்கு உள்ளாகாமல் புத்தூர் மேற்கு கிந்திட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.” என்று பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

0 கருத்துகள்:

Post a Comment