Search This Blog n

06 April 2013

இலங்கை செல்லும் இந்தியக் குழு


இந்திய எம்.பி.க்கள் குழு வருகிற 8ம் திகதி இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனம் சார்பில் இலங்கை புறப்பட்டு செல்கிறது.
அக்குழுவில் சுகதாராஸ் (திரிணாமுல் காங்கிரஸ்), சந்தீப்தீக்ஷிந் (காங்கிரஸ்), அனுராக்தாகூர் (பா.ஜனதா), தனஞ்சய்சிங் (பகுஜன் சமாஜ் கட்சி), கவுடுயாஸ்கி (காங்கிரஸ்), பிரகாஷ் ஜவாதகார் (பா.ஜனதா) ஆகிய 6 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர், தமிழக எம்.பி.க்கள் யாரும் இடம்பெறவில்லை.
இவர்களுடன் இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனத்தை சேர்ந்த 2 பிரதிநிதிகளும் உள்ளனர். இவர்கள் இலங்கையில் மூத்த மந்திரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் அந்நாட்டு எம்.பி.க்களை சந்தித்து பேசுகின்றனர். வருகின்ற 12ம் திகதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது கொழும்பு மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் செல்கின்றனர்.
யாழ்ப்பாணம் செல்லும் அவர்கள் அங்கு இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டபணிகளை ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக தமிழர்களுக்கு கட்டித் தரப்படும் வீடுகளை நேரில் பார்வையிடப்போவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது
 

0 கருத்துகள்:

Post a Comment