ஜனாதிபதி ஆணைக்குழு ! நாட்டில் ஒரு பாரிய குற்றச்செயல் நடந்தால் அதனை சர்வதேச நாடுகள் கண்டிக்க முன்னர் அதனை அப்படியே மூடி மறைக்க, இந்தியா போன்ற நாடுகளில் விசாரணைக் கமிஷன் என்று ஒன்றை வைப்பார்கள். இந்த விசாரணைக் கமிஷன் அப்படியே பல ஆண்டுகளைக் கடத்தும். பின்னர் இத்துப்போன ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும். பின்னர் அப் பிரச்சனை அப்படியே மூடிமறைக்கப்படும். இது தான் பல நாடுகளில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாத்தளையில் சுமர் 150 மனித எலும்புக்கூடுகள் ஒரு புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே சுமார் 150 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
பொலிசார் விசாரணைகளை நடத்திவரும் இவ்வேளை மகிந்தர் தான் ஒரு குழுவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இனி ஜனாதிபதி ஆணைக்குழுவே மாத்தளை புதைகுழி விடையத்தை விசாரிக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி இந்த விசாரணையும் எல்.எல்.ஆர்.சி போல பிசுபிசுத்துப் போகவுள்ளது என்பது திண்ணம்
0 கருத்துகள்:
Post a Comment