கடந்த நான்கு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக தைவான் அரசு 6 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்து அதனை நிறைவேற்றியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில், தைவானின் நீதித்துறை அமைச்சராக செங் யன்க்பூ பதவியேற்றார். அதன் பின்னர் நான்கு முறை மரண தண்டனைகள் மொத்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது தைவானில் வழக்கமாகும்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தைவானின் நான்கு நகரங்களின் சிறையில் இருந்த 6 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தார். நேற்று வெள்ளி அன்று இரவு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக நீதித்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றவாளிகள் பல்வேறு கொலைகளில் ஈடுபட்டவர்கள் என்றும் இத்தகைய குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்கியே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் நீதித்துறையின் துணை அமைச்சர் செங் மிங் டங் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி 6 மரண தண்டனைகள் ஒன்றாக நிறைவேற்றப்பட்டன. தற்போது நான்கு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக 6 பேர் ஒன்றாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment