இரண்டாம் உலகப்போரின் பொழுது வீசப்பட்ட 100 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்றை, வெடிக்காத நிலையில் ஜேர்மனி தலைநகர் பெர்லின் அருகே நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப்போரின் போது கூட்டுப்படையினரால் ஜேர்மனியின் மீது வீசப்பட்டதாகும்.
பெர்லின் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் புதைந்து கிடந்த இந்த வெடிகுண்டை நிபுணர்கள் இன்று வெளியே தோன்றி எடுத்தனர். இதனால் அப்பகுதியில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் ஹிட்லர் தலைமையிலான படைக்கு எதிராக, கூட்டுப்படையினர் இரண்டாம் உலகப்போரின்பொழுது பெர்லின் நகரத்தில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
அப்போது வீசப்பட்ட குண்டுகளில் இன்னும் சுமார் 3000 குண்டுகள் பெர்லின் நகரத்திற்குள் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கட்டிடப்பணிகள் மேற்கொள்ளும்பொழுது இந்த வெடிக்கப்படாத வெடிகுண்டுகள் ஒவ்வொன்றாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment