Search This Blog n

03 April 2013

நாயுடன் வந்து மனைவிக்கு எதிராக மனுக்கொடுத்த


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நபரொருவர் நாயுடன் சென்று மனைவிக்கு எதிராக மனுக்கொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தவிட்டுச்சந்தை முத்துக்கருப்பபிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி என்பவர் தான் வளர்க்கும் நாயுடன் வந்து மனு கொடுக்க வந்தார்.
கலெக்டரிடம் அவர் தன் மனைவிக்கு எதிராக கொடுத்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
என்னுடைய மனைவி சந்திரா இரண்டு பெண் குழந்தைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் என்னிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார். தற்போது நான் வளர்த்து வரும் நாயுடன் வாழ்ந்து வருகிறேன்.
இந்நிலையில் என்னை சிலர் மிரட்டி வருகின்றனர். என் வீட்டில் உள்ள பொருட்களையும் எடுத்து சென்று விட்டனர். மனைவியும் என்னை மிரட்டி வருகிறார்.
இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்திருந்தார்.
மனு கொடுக்க வரிசையில் குமாரசாமி நின்ற போது உடன் நாயும் நின்றது. ஆனால், பொலிசார், நாயை உள்ளே விட மறுத்துவிட்டனர்.
பொலிசார் அசந்த நேரம் பார்த்து நாய் திடீரென்று அரங்கில் புகுந்து குமாரசாமி அருகே சென்று நின்றது. அப்போது கலெக்டரிடம் மனு கொடுத்த அவர் நாய் உள்ளே வந்ததிற்கு மன்னிப்பு கோரினார்.

0 கருத்துகள்:

Post a Comment