Search This Blog n

05 April 2013

விபத்துக்குள்ளாக்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கு: 3 பேர் ?


பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் பயணம் செய்த பேருந்து பெரும் விபத்துக்குள்ளான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக்கில் இருந்து தியால்காமுக்கு இன்று தனியார் பள்ளி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் அதில் பயணம் செய்தனர். அந்த பேருந்து, தியால்காம் மலைப்பாதையில் உள்ள வளைவில் திரும்பியபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொலிசாரும் அப்பகுதி மக்களும் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 4 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. பேருந்து சாரதி உள்ளிட்ட 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  சாரதி உள்ளிட்ட 8 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்:

Post a Comment