Search This Blog n

19 April 2013

செல்வாக்கு படைத்தவர் பட்டியலில் நடிகர் அமீர்



 உலகின் செல்வாக்கு படைத்தோரின் 100 பேர் கொண்ட பட்டியலில் நமது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நடிகர் அமீர் கான் மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூயார்க்கில் இருந்து வெளிவரும் ‘டைம்’ இதழ் ஆண்டுதோறும் அரசியல், கலை, சமூகம் உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மத்திய நிதியமைச்சரும் தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம், இந்தி நடிகரும் சமூக ஆர்வலருமான அமீர் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ப.சிதம்பரம் குறித்தான்ன அறிமுகக் கட்டுரையில், அவரது அரசியல் மற்றும் நிதி நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டைமின் கவர் ஃபோட்டோவில் இடம் பெற்றுள்ள அமீர் கானின் சிறப்புகள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அமீர் கான் தனது ‘சத்யமேவ ஜெயதே’ சமூக விழிப்பு உணர்வு நிகழ்ச்சி மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்ததை ‘டைம்’ சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்தியர் – சமூக ஆர்வலர் விருந்தா குரோவர் (வழக்கறிஞரான இவர், டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் நீதிக்காக குரல் கொடுத்தவரில் முக்கியமானவர்), இந்திய வம்சாவளி கலிஃபோர்னியாவின் அடார்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது ‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பாகிஸ்தான் சிறுமி மலாலாவும் இடம்பெற்றுள்ளார். அதுவும், கவர் ஃபோட்டோக்களில் கெளரவப்படுத்தப்பட்டுள்ளார்.பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருவதற்காக, தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா இப்போது முழு குணமடைந்து, இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிஷேல், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நடிகை ஜெனீஃபர் லாரன்ஸ், இயக்குனர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்



0 கருத்துகள்:

Post a Comment