துப்பாக்கியுடன் மோதிய கல்லூரி மாணவர்கள்: சென்னையில் பரபரப்பு
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இருவர் துப்பாக்கியுடன் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயிலில் உள்ள கல்லூரி ஒன்றில் கணினி அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் இரண்டு வெளிமாநில மாணவர்களுக்கு இடையே இன்று திடீரென கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது, பீகாரைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா என்பவர் தாம் வைத்திருந்த கைதுப்பாக்கியால் மணீஷ் என்ற மாணவரை திடீரென தாக்கியிருக்கிறார். இத்தாக்குதலில் மணீஷ்என்ற மாணவன் காயமடைந்திருக்கிறார்.
இது பற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிக் கொண்ட சம்பவம் சென்னைப் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
மாணவர்களிடையே கைகலப்புக்கு காரணம் என்ன என்பது குறித்தும் கைத்துப்பாக்கி மாணவர் கைக்கு வந்தது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்துகள்:
Post a Comment