பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும் வெகுகாலம் தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது.
மாற்றங்கள் கண்டிப்பாக வரவேண்டும், அதனைத் தொடர்ந்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டார்.
ஆனால் இதை காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்திருப்பதை தொடர்ந்து இந்த பிரச்சினை மைய விவாதப்பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருது வழங்கும் விழாவின் இடையே நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:- நீங்கள் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பீர்களா?
பதில்:- இது யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படுகிற கேள்வி. நாங்கள் எங்கள் பதவி காலத்தை நிறைவு செய்ய வேண்டி உள்ளது.
கேள்வி:- மீண்டும் பிரதமர் பதவி வகிக்க உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றுகருதுகிறீர்களா?
பதில்:- நான் மீண்டும் பிரதமர் பதவி வகிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இல்லை என்றும் சொல்வதற்கு இல்லை.
கேள்வி:- திக்விஜய் சிங் கருத்தை அடுத்து இரு அதிகார மைய பிரச்சினை விவாதப்பொருளாகி இருக்கிறதே?
பதில்:- இதெல்லாம் ஊடகங்களின் வேலை ஆகும். இது ஒன்றுக்கும் பலனற்ற விவாதம்.
கேள்வி:- ராகுல் காந்தி பிரதமர் ஆவதை வரவேற்கிறீர்களா?
பதில்:- ஓ... ஆமாம். எந்த நாளிலும் (அவர் பிரதமர் ஆவதை வரவேற்கிறேன்.)
பதில்:- மிக சிறப்பாக இருந்தது.
0 கருத்துகள்:
Post a Comment