அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அவர்கள் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டானது ஒவ்வொரு வருடமும் வரும்வேளை பெரும் எதிர்ப்பார்ப்புடன் அது மலர்கிறது என்று குறிப்பிட்டுள்ள திரு ஜோன் கெரி அவர்கள், அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வாழ்த்துக்களையே தான் அவரது சார்பாகத் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இலங்கையில் சுபீட்சமும் அமைதியும் உருவாகவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஜோன் கெரி அவர்கள், இலங்கையில் விரைவில் அமைதி திரும்பவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ராஜாங்க செயலாளராக பணியாற்றிய கெலரி கிளிங்ரன் அவர்கள் சமீபத்தில் ஓய்வுபெற்றார். அதன் பின்னர் செனட்டர் ஜோன் கெரி அவர்கள் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செனட்டர் ஜோன் கெரி அவர்கள் முன் நாள் செயலாளர் கெலரி கிளிங்கரன் போல தமிழர் சார் போக்கை கடைப்பிடிப்பாரா என்ற கேள்விகளும் இருக்கிறது. இருப்பினும் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எடுத்துரைத்து அவரையும் தமிழர்களுக்கு ஆதரவாக திரட்டி எமது நோக்கங்கள் நிறைவேற நாம் பயன்படுத்துவதே, மதி நுட்ப்பமாகும்.
0 கருத்துகள்:
Post a Comment