நடுவானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், 179 பயணிகளுடன் உயிர் தப்பிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
அசாம் மாநிலம் திப்ரூகர் நகரில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் விமானம் 179 பயணிகளுடன் திங்கள்கிழமை கொல்கத்தா வழியாக குவாஹாட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் நடுவானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, பைலட்டுகளுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்தது.
விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த சாதனத்தில் இருந்து வந்த எச்சரிக்கை அதுவாகும். அதாவது, நடுவானில் எதிர்திசையிலோ அல்லது அருகிலோ விமானம் வருகிறதா என்பது குறித்து உஷார்படுத்தும் அந்தச் சாதனத்தில் இருந்து பகல் 3.07 மணிக்கு இந்த சமிக்ஞை கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, பைலட்டுகள் விமானத்தை லாவகமாகச் செலுத்தினர். இதன் மூலம் வேறொரு விமானத்துடன் நிகழவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டு, 179 பயணிகளும் உயிர் தப்பியதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும்,"அப்பகுதியில் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. இது தொடர்பாகவே இண்டிகோ நிறுவன விமான பைலட்டுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது' என்று மும்பையில் விமானப் போக்குவரத்து ஆணையகம் (ஏடிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment