Search This Blog n

19 April 2013

பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரியின் வேலை


 டெல்லி காந்தி நகரில் 5 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசித்த நபரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது.
அவருக்கு டெல்லி தயான்சந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் ஒரு பெண் மீது உதவி பொலீஸ் கமிஷனர் தாக்கினார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
காவல்துறையின் இந்த அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை தாக்கிய உதவி போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment