Search This Blog n

05 April 2013

திமுகாவின் அடுத்த தலைவர் யார்?:

மு.க.அழகிரியை பின்னுக்கு தள்ளிய குஷ்பு
ஜூனியர் விகடன் இதழ் 'மக்கள் மனசு' என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டு வருகிறது.
ஜூனியர் விகடனின் முதல் கட்ட சர்வே முடிவுகளைத் தொடர்ந்து 2-ம் கட்ட சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நேரடியாக 2,701 நபர்களிடமும் இணையம் வழியாக 5,055 பேரிடமும் 23 கேள்விகள் அடங்கிய கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது ஜூனியர் விகடன்.
அந்த வகையில் திமுக மற்றும் அதிமுக வின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள வாக்குப்பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகாவில் முதலிடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, சசிகலாவுக்கு 4% தான்:
இதில் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி வேறு யாருக்கு இருக்கிறது என்ற கேள்விக்கு சசிகலாவுக்கு 4.41% அதாவது 342 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு 22.86% அதாவது 1,773 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மற்றவர்களுக்குத்தான் 72.73% அதாவது 5,641 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுகாவின் அடுத்த தலைவர்:
ஸ்டாலினுக்கு 'அறுதிப் பெரும்பான்மை' ஆதரவு... இதேபோல் திமுகவில் அடுத்த தலைவராக யார் வர வேண்டும் என்பதில் ஸ்டாலின் 60.44% அதாவது 4,688 பேரின் ஆதரவைப் பெற்று 'அறுதிப் பெரும்பான்மை' பெற்றிருக்கிறார்.
அழகிரியை முந்திய குஷ்பு: திமுக தலைவர் கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு நடிகை குஷ்புவை விட குறைவான செல்வாக்கே மக்களிடம் இருப்பதாக ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
குஷ்புவுக்கு 8.44%, அழகிரிக்கு 2.52%.. குஷ்புவுக்கு 8.44% அதாவது 655 பேர் ஆதரவும் மு.க. அழகிரிக்கு 2.52% அதாவது 195 பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்
 

0 கருத்துகள்:

Post a Comment