Search This Blog n

05 April 2013

சகோதரிகள் 4 பேர் மீது மர்ம நபர்கள் அசிட் வீச்சு


உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரிகள் மீது  2 மர்ம நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லியில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகளில் 3 பேர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றுகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை இவர்கள் பணி முடிந்து வீட்டுக்கு ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் வேலை செய்யாத மற்றொரு சகோதரியும் வந்தார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் இவர்களை ஆபாசமாக கிண்டல் செய்ததுடன்,அவர்கள் கொண்டு வந்திருந்த ஆசிட்டை எடுத்து அப்பெண்கள் மீது வீசெியுள்ளனர்.
அது சகோதரிகள் 4 பேர் மீதும் பட்டதால், வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். அந்த வழியே சென்றவர்கள்ஈ சகோதரிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சகோதரிகளில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், அவர் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவத்தால், உத்தர பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மர்ம நபர்கள் 2 பேரும் தப்பி விட்டனர். அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment