குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, மூன்றாவது முறை இப்பொறுப்பை ஏற்றுள்ளார். வரும் 9ம் தேதி கொல்கத்தா சென்று அங்குள்ள தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் செய்ய மோடி திட்டமிட்டுள்ளார்.
கொல்கத்தா வரும் அவருக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க மேற்கு வங்காள மாநில பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். சமீபத்தில் தேசிய அளவில் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதால் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தவும் மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தை பதிவு செய்ய முயன்ற போது, ஏற்கனவே 9ம் தேதிக்கு வேறொருவர் இந்த அரங்கத்தை பதிவு செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பாணர்ஜிக்கு இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி, அரங்கத்தை தங்களுக்கு ஒதுக்கி தருவதற்கு உதவும்படி மாநில பா.ஜ.க. தலைவர் ராகுல் சின்ஹா கேட்டுக்கொண்டார். ”இவ்விவகாரத்தில் நான் எதுவும் உதவ முடியாது” என மம்தா பாணர்ஜி கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், வரவேற்பு நிகழ்ச்சியை எங்கே வைத்துக்கொள்ளலாம் என பா.ஜ.க.வினர் ஆலோசித்து வருகின்றனர்
0 கருத்துகள்:
Post a Comment