பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திலிருந்து, 10 கி.மீ.,தூரத்தில் உள்ளது வாட்டர்டவுன் பகுதி. இங்குள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப மையத்தில் நேற்று முன்தினம் இரவு பொலீஸாருக்கும், பாஸ்டன் நகரில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படு்ம் குற்றவாளிகளுக்கும் பொலீஸுக்குமிடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பொலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.அந்த வழியாக சென்ற காரை மறித்து தப்பி சென்ற இரண்டு தீவிரவாதிகளையும் பொலீஸார் துரத்தி சென்றனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொருவன் தப்பி சென்று விட்டான். கார் டிரைவர் காயமின்றி தப்பினார்.
தப்பி சென்றவனை பொலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவின், பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவனை போலீசார் சுட்டு கொன்றனர். மற்றொருவன் தீவிரமாக தேடப்பட்டு வருகிறான்.அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், சமீபத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், மூன்று பேர் பலியாயினர்; 170 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, எப்.பி.ஐ., அதிகாரிகள், தீவிரமாக தேடி வந்தனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.மாரத்தான் போட்டி நடக்கும் பாதையில், குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களின் படத்தை பொலீஸார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் நீண்ட முடியுடன் தொப்பி அணிந்துள்ளனர். இந்த நபர்களின் பெயர், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
0 கருத்துகள்:
Post a Comment