தென்காசியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தையின் சடலத்தை நாய் கவ்விச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி அருகே நெடுவயல் பகுதியை சேர்ந்த மாடசாமி, நாகம்மாள் ஆகியொருக்கு கடந்த 2ம் திகதி இடைகால் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தவுடன் மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக தென்காசி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்துள்ளனர்.
குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் திகதி இரவு உயிரிழந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையின் சடலத்தை மருத்துவமனை வளாகத்திலேயே புதைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஒரு ஆண்குழந்தையின் சடலத்தை நாய் ஒன்று கவ்விகொண்டு சென்றுள்ளது. அந்த உடலில் குழந்தையின் தலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த தம்பதியினர் குழந்தையைப் புதைப்பதற்கு வெட்டிய குழி ஆழமானதாக இல்லாததால் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தென்காசி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment