பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் அவசர தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட பயண அறிவுரையை திரும்பப் பெற்ற அமெரிக்கா, ”சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின் படி, பாகிஸ்தானில் வசிக்கும் அல்லது சுற்றுலா செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் அங்குள்ள பல்வேறு நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள், சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்” என எச்சரித்துள்ளது.
இது மட்டுமின்றி, பணத்துக்காக அமெரிக்கர்களை கடத்தும் சம்பவங்களும் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகின்றன. எனவே, தங்களது உயிருக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம் என கருதும் அமெரிக்கர்கள், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும்.
இதேபோல், அவசர தேவையில்லாமல் பாகிஸ்தான் செல்வதையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு துறை நேற்று எச்சரித்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment