Search This Blog n

23 April 2013

ரகசியமாக அத்துமீறி நுழைந்த சீன இராணுவம் .,.,


இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலபிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீன இராணுவம் அடிக்கடி இந்திய எல்லைகளில் ஊடுருவி வருகிறது.
கடந்த வாரம் சீன மக்கள், விடுதலைப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுருவிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வடக்கு லடாக் பகுதிக்குள் நுழைந்த இராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் சுமார் 6 மைல்(10 கிலோ மீட்டர்) தூரத்துக்கு வந்துள்ளனர்.
மலைப் பாங்கான ஒரு இடத்தில் வெட்டவெளியில் அவர்கள் முகாம் ஒன்றையும் அமைத்ததுடன், சுமார் 20 வீரர்கள் அந்த முகாமில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் இந்திய இராணுவத்தின் 5-வது பட்டாலியன் படைப்பிரிவு அங்கு விரைந்து, சீன இராணுவம் அமைத்த முகாமில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தற்காலிக கூடாரம் அமைத்துள்ளது.
இதற்கிடையே மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
 

0 கருத்துகள்:

Post a Comment