ஆந்திர மாநில தலைநகர் ஹைதரா பாத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கங்கதேவி பள்ளி என்னும் பெயர் கொண்டக் கிராமம். இந்தக் கிராமத்தில் 1,300 பேர்தான் வசிக்கின்றனர். அனை வரும் கல்வியறிவு பெற்றவர்கள். தெருவின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, விஞ்ஞானபூர்வமாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி, 24 மணி நேர மின் வசதி, கான்கிரீட் சாலைகள், சாலையோர மரங்கள் என அதிசய கிராமமாக திகழ்கிறது.
இந்தக் கிராமத்தில் ஒரு குடும்பத்தில்கூட இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது. சரியாக காலை 9 மணிக்குத் துவங்கும் பள்ளிக்கூடம் மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவது போல பள்ளிக்கு “மட்டம்’ போடும் மாணவரும் இங்கு கிடையாது.
அனைத்துக் குழந்தைகளுக்கும், நோய்த் தடுப்பு மருந்து, ஊசி போன்றவை, முறையாக வழங்கப்படுகின்றன. ஆண் - பெண் விகிதாசாரமும் சரிசமமாக உள்ளது. ஒவ்வொரு வீட்டுத் தலைவரும் தினமும் உழைக்கிறார். மாதம் தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் சேமிப்பு செய்கிறார்.
மதுபானக் கடைகள் அறவே கிடையாது. அனைவருக்கும் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, முதலுதவி முதல் பெரிய அளவிலானச் சிகிச்சைகள் அளிப் பதற்கும் வசதி கொண்ட மருத்துவ மையங்கள் எனக் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்தக் கிராமம்

0 கருத்துகள்:
Post a Comment