Search This Blog n

27 April 2013

பலமிக்க நாடுகளில் இந்தியாவுக்கு 8வது இடம்


உலகின் மிக பலம் வாய்ந்த 27 நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
 இராணுவ செலவினம், எரிபொருள் பாதுகாப்பு, தனிநபர் வருமானம், மக்கள் தொகை, தொழில் நுட்ப ஆளுமைத் திறன் போன்ற தகுதிகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியா பொருளாதார பலத்தில் 8வது இடத்திலும், இராணுவ பலத்தில் 7-வது இடத்திலும், தொழில் நுட்ப ஆளுமைத்திறன் 17-வது இடத்திலும், எரிசக்தி பாதுகாப்பு 20-வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment