மேகாலயா மாநிலத்தின் மேற்கு காசி மலை
காற்றின் வேகத்தில் மரங்கள் அடியோடு சாய்ந்தன. தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கம்பங்கள் விழுந்ததில் பல இடங்களில் தொடர்புகள் அறுந்தன. இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் இறந்துள்ளதாகவும், 50-ற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 50-ற்க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ப் பகுதியில் வீசிய புயல் காற்றாலும், பெரும் மழையாலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்த மக்கள் வீடுகளை இழந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறையினரும், மின்சார வாரியமும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக, மாநில அரசு, ரூ.25 லட்சம் அளித்துள்ளதாக, இயற்கைப் பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.சி.லாலு தெரிவித்தார்
0 கருத்துகள்:
Post a Comment