பிரான்சில் வெடிகுண்டால் சிறையை தகர்த்து தப்பிய ரேடோன் பெய்ட் என்ற கைதி பாதுகாப்பாக வார்டன்களையும் பிணை கைதியாக பிடித்து சென்றுள்ளார்.
வடக்கு பிரான்ஸ் பகுதியை சேர்ந்த இவர் கார்களை கொள்ளையடித்து விற்று வந்துள்ளார். எனவே அவரை பொலிசார் கைது செய்து சி கியூடின் நகரில் உள்ள சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று அவர் சிறையை குண்டு வைத்து தகர்த்தியதில் சிறையில் இருந்த ஐந்து கதவுகள் நொறுங்கின. பின்னர், அவன் அங்கிருந்து தப்பி செல்லும் பொழுது சிறை வார்டன்கள் ஐந்து பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளார்.
அப்போது, சிறையில் இருந்து வெளியேறியவுடன் ஒரு வார்டனையும், சிறிது தூரம் சென்ற பின்னர் இரண்டு வார்டனையும் விடுதலை செய்தார். மீதியிருந்த இரண்டு பேரை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு மாயமானார்.
இதற்கிடையே, வெடிகுண்டு மூலம் சிறையை தகர்த்து விட்டு தப்பிய பெய்டை ஹெலிகொப்டர் மூலம் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் பெய்டை பார்க்க அவரது மனைவி சிறைக்கு வந்திருந்தார். அவர் தான் இவருக்கு வெடிகுண்டுகளை மறைமுகமாக வழங்கியிருக்க வேண்டும் என்று பொலிசார் கருதுகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment