Search This Blog n

24 April 2013

மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய பெண்:?


பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மிட்கிராப் ரூயிசிலிப்பி என்ற பள்ளி ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(34) என்ற பெண் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அவருடன் பெண் குழந்தைகள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4) மற்றும் அவரது கணவரின் பெற்றோர்கள் வசித்து வந்தனர். கணவரின் பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்தபொழுது சோலங்கியும், அவரது பெண் குழந்தைகள் இருவரும் கடந்த 12ம் திகதியன்று வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தனர்.
லேப் டெக்னீசியான அவர் தனது குழந்தைகளுடன் விஷமருந்து குடித்து இறந்தாரா? அல்லது கேஸ் கசிவு ஏற்பட்டு இறந்தனரா என்கிற கோணத்தில் ஸ்காட்லாண்டு பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இருந்தும், இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்பொழுது நடைபெற்று வந்த சோதனை குறித்து ஸ்காட்லாண்டு யார்டு பொலிசார் கூறுகையில், சில விஷமருந்துகள் கலந்திருத்த சந்தேகிக்கப்படும் மூன்று டம்ளர்களை பரிசோதித்து வருகின்றோம்.
இறப்பதற்கு முன் அவர் தனது கணவருக்கு எழுதிய கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். மேலும் பிரேத பரிசோதனைகள் குறித்த முழு அறிக்கைக்காகவும் காத்துகொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment