பாஹாங் நகர சீரமைப்பு நிலையத்தைத் திறந்துவைத் துப் பேசிய அவர், “அற்பத் தனமாக ‘மாற்றம்’ என்ற ஒரு சொல்லைக் கூறிக்கொண்டு சிலர் திரிந்து வருவதை அறிந்திருக்கிறேன். ஆனால் உண்மையான மாற்றத்தை அவர்களால் கொண்டுவர முடியுமா? ஒரு கப்பலில் மூன்று மாலுமிகள் இருக்கும்போது, எப்படி அவர்களால் இதைச் சாத்தியமாக்க முடியும்? என்ன நடக்கும் என்று அவர்களால் யூகிக்க முடியுமா? கப்பல் மூழ்கிவிடும்,” என்று கூறினார். மாற்றத்தைக் கொண்டுவரும் திட்டங் களின் மூலம், தேசிய முன்னணி தன்னை நிரூபித்துள்ளது என்று அவர் சுட்டினார்.
ஆட்சியை மாற்றாமலேயே நாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் உண்மையான மாற்றங்களும் முன்னேற்றமும் மலேசியாவில் நிகழ்ந்து வருவதால், அதிகார மாற்றம் தேவையில்லை என்று நஜிப் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
Post a Comment