ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் புல்லர் வழக்கில் அவருக்கு மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது தனக்கு பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
உலக நாடுகளில் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது என்ற அற்புதம்மாள், தமிழகத்திலேயாவது மரண தண்டனையை ஒழிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டப்பேரவையை கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் மனு அளித்து தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்தார்.
0 கருத்துகள்:
Post a Comment