ஈஸ்டர் பண்டிகையையொட்டி சில இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவ கூட்டுப் படையினருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.யான் அவாக்கி நகர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட திட்டத்தை ராணுவம் நேற்று முறியடித்தது.
வாகனத்தில் கடத்தப்பட்ட ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்து, தீவிரவாதிகளின் பதுங்குமிடத்தை ராணுவம் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.
சில மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 14 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தளபதி இகடிச்சி லுவேகா தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment