இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ஓடும் காரில் வைத்து 35 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கூர்கானில் இருந்து வந்த 35 வயது மதிக்க தக்க பெண் தனது சகோதரிகளுடன் தெற்கு டில்லியில் ஷாப்பிங்மாலுக்கு கடந்த சனிக்கிழமை வந்துள்ளார்.
அப்போது காரில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை ஷாப்பிங்மாலுக்கு அழைத்து செல்வதாக கூறினர். சங்கம்விஹார் பகுதி வரும் போது 35 வயது பெண்ணை காரில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று அந்த பெண் டில்லி பொலிசில் புகார் கூறியுள்ளதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment