பீகாரில் மாநிலத்தில் தன்னை கற்பழித்த காமக்கொடூரனை உயிருடன் தீயிட்டு கொழுத்தியுள்ளார் 45 வயது விதவைப்பெண். பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பார்சா பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது சோயியன் கிராமம்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த 45 வயது விதவைப் பெண் கடந்த திங்கட்கிழமை இரவு தனது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளூர் ரவுடி போலா தாகூர் என்பவர் குடிபோதையில் அவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த விதவையை கற்பழித்தார்.
போதையில் இருந்த அவர் வீட்டின் அறையில் சுயநினைவை இழந்து விழுந்துவிட்டார். இதையடுத்து அந்த பெண் தனது உடைகளை மண்ணெண்ணெயில் நனைத்து அந்த அறைக்கு தீ வைத்து கதவைப் பூட்டிவிட்டார்.
உடனே அவர் வெளியே சென்று கிராமத்தினரை அழைத்தார். கிராமத்தினர் வருவதற்குள் தாகூரின் உடலில் பலத்த தீக்காயங்களுடன் இருந்தது. இகதையடுத்து கிராமத்தினர் அவரை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் இறந்தார்.
தாகூரின் மனைவி தனது கணவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்க மறுத்து விதவை பெண் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment