இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேதே மிடில்டன் கடந்த வருடம் லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது அங்கு தொடர்பு கொண்ட ஆஸ்திரேலிய வானொலியின் நகைச்சுவை வர்ணனையாளர்கள், இளவரசியின் குடும்ப உறுப்பினர்கள் போல் பேசி, இந்தியாவைச் சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தாவிடம் (46) இருந்து இளவரசி தொடர்பான மருத்துவக் குறிப்புகளை பெற்றனர்.
பின்னர் அந்த செய்தியை ஆஸ்திரேலிய வானொலியில் ஒளிபரப்பினர். இச்செய்தி நர்ஸ் ஜெசிந்தாவிற்கு தெரியவர அரச குடும்பத்தின் செய்தியை வெளியிட்டுவிட்டோமே என்று மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவர் எழுதிய தற்கொலை குறிப்பு ஒன்றில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை கண்டித்துள்ளார். அவரது தற்கொலைக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தயவு செய்து எனது தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நான் உண்மையில் வருந்துகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்காக நன்றிகள். இளவரசியின் ரகசியங்கள் பற்றி ஒளிபரப்பிய மெல் கிரெய்க், மைக்கேல் கிருஸ்டியன் ஆகியோர்களின் செயல்களே இதற்கு பொறுப்பு என நான் உறுதியாக நம்புகிறேன் என்னை மன்னித்துவிடுங்கள் என தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment