This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 March 2015

ஏழுமலையான் கோவிலில் கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.  ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். முன்னதாக திருமலைக்கு வந்த தமிழக கவர்னரை திருமலை–திருப்பதி...

30 March 2015

குலுங்கிச் சிரித்த குஷ்பு ஈவிகேஎஸ் பேச!!!

சென்னையில் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா பதவியேற்பு விழாவில் நடிகை குஷ்புவை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்துள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். சென்னை, தமிழக காங்கிரசின் சிறுபான்மை பிரிவு தலைவராக அஸ்லாம் பாட்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு...

மாணவி பலாத்காரம்: கைதான பல்கலை பேராசிரியருக்கு ஆண்மை சோதனை!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச சிடி காட்டி பலாத்காரம் செய்த பல்கலைக்கழக பேராசியருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக இருந்து வருபவர் மதியழகன் (வயது 58). இவரது வீடு லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமி 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு மதியழகன் டியூசன் சொல்லி கொடுத்தார். அத்துடன் அந்த மாணவிக்கு தொடர்ந்து...

மது விற்ற வாலிபருக்கு சராமரி அடி உதை!!!

திருட்டுத்தனமாக மதுபாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞர் தாக்கப் பட்டது தொடர்பாக நாகர்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி பகுதியில் திருட்டித்தனமாக மது பாட்டில்கள் மற்றும் போதை பொருள்கள் விற்கப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,  அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உரிமம் இல்லாமல் மது விற்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து...

இண்டர்நெட் வசதி; விரைவில் இந்திய விமானங்களில்

இந்தியாவி்ல் விமானங்களில் பறக்கும் போது வை-ஃபை இண்டர்நெட் பயன்படுத்தும் வசதியை தற்போது எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களே வழங்கி வருகின்றன. பெரும்பாலான விமான பயணிகள் நீண்டகாலமாக இந்த இன்பிளைட் வை-ஃபை வசதியை எல்லா விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், விரைவில் இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு...

கணவரை வெறுப்பதற்கு சமம் தாலியை அறுப்பது!!!

திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ''புகழுக்கு களங்கம் விளைவிக்கிற செயலாகத்தான் இதை நான் பார்க்கிறேன். மக்களால் மறந்துபோன திராவிட கொள்கைகளை மீண்டும் நினைவுபடுத்த வீரமணி இப்படி ஒரு காரியத்தை கையில் எடுத்துள்ளார். தாலி என்பது பா.ஜனதா அல்லது இந்து இயக்கங்களின் பிரச்சினை அல்ல.  ஒவ்வொரு சகோதரியின்...

29 March 2015

கர்நாடகம் அணை கட்ட அனைத்து கட்சிகள் எதிர்ப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் 55 தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு; ஒரே குழுவாக சென்று, சட்டசபை தீர்மானத்தை வழங்கினார்கள் கர்நாடக அரசு காவியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்ட தீர்மானித்து இருக்கிறது. அணை கட்ட கர்நாடகம் முடிவு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரின் பங்கை ஏற்கனவே கர்நாடகம் முறைப்படி வழங்க மறுத்து வரும் நிலையில் மேலும் 2 அணைகளை கட்டினால், தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும். இதனால் கர்நாடகம்...

நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு???'

ஐதராபாத் கோர்ட்டு உத்தரவின்படி, நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுருதிஹாசன் மீது வழக்கு ஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நாகார்ஜுன்–கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க நடிகை சுருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். படப்பிடிப்புக்கு தேதிகளை ஒதுக்கி தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக...

28 March 2015

ஒடுற ரயிலை மறிங்க: நிக்கிற ரயில் வேணாம் கைதானோர் விடுதலை???

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதூவில் அணைகட்டுவதை எதிர்த்து சென்னை எழும்புரில், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். கர்நாடக அரசு காவிரி அணையின்  குறுக்கே இரண்டு அணைகளை கட்டும் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் இன்று விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில்...

மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் சியோக்கி ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென ரெயிலின் சரக்கு பெட்டியில் தீ பிடித்தது. தொடர்ந்து தீ அருகே இருந்த மற்றொரு பெட்டியிலும் வேகமாக பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஏராளமான பயணிகளின்  உடமைகள்...

எனக்கு பணம் வெளிநாடுகளில் இருந்து வரவில்லை அன்னா ஹசாரே

 சமூக போராட்டங்கள் நடத்துவதற்கு ஆதரவாக எனக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் பணம் வரவில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார். அன்னா ஹசாரே மீது குற்றச்சாட்டு ஊழலுக்கு எதிராக போராடி வருபவரும், காந்தியவாதியுமான 77 வயது அன்னா ஹசாரே, போராட்டங்கள் நடத்துவதற்கு பக்கபலமாக அவருக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்தும் பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து அன்னா...

27 March 2015

ஸ்பெக்ட்ரம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனது !!!

ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடிக்கு விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் மறு ஏலத்துக்காக அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு  தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு,...

தோல்வியை தழுவியதால் எனக்கு மகிழ்ச்சி???

 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், பிரபல பாலிவுட் டைரக்டர் ராம் கோபால் வர்மா இந்திய அணி தோல்வியடைந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை கொந்தளிக்க  செய்துள்ளது.  ராம் கோபால் வர்மா டுவிட்டரில் பதிவு செய்தவை பின்வருமாறு:- இந்தியா தோல்வியை தழுவியதால் எனக்கு மிக்க மகிழ்ச்சி....

26 March 2015

பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த தயார்: அன்னா ஹசாரே

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான பலம் இல்லாததால், மேல்-சபையில் நிறைவேற்றப்படாமல் காத்திருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி மத்திய மந்திரி...

பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படை விமானம், கடலில் விழுந்து விபத்து

  கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படை விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பெண் அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கதி என்ன ஆனது என தெரியவில்லை. கடற்படை விமானம் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம், ‘டார்னியர்’. இந்த விமானம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு, போவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்று, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த விமானத்தில் விமானி, கமாண்டர், ஒரு பெண்...

24 March 2015

இன்று மீனவர்கள் அனைவரும் விடுதலை..

அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 21 ஆம்  திகதி இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் குறித்த 21 பேரும் கைது செய்யப்பட்டு 22 ஆம் திகதி யாழ். மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்திடம்  கையளிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினமே ஊர்காவற்றுறை...

23 March 2015

அரசு அறிமுகப்படுத்துகிறது விளையாட்டுத்துறையில்பட்டப்படிப்பு

 வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டுத்துறையில் இளநிலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துகிறது டெல்லி மாநில அரசு. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் கேரியரை ஸ்போர்ட்ஸிலேயே கொண்டு செல்ல இது மிக உதவியாக இருக்கும் என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் பேட்மிண்டன் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது....

நில நடுக்கம் மேகாலயாவில் ஏற்பட்டது.!!!

 மேகாலயா மாநிலத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவின் ஜெயின்டியா மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 44 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

எங்கேஉண்மையான வரலாறு ???

ஆரம்பம் முதல் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரலாறு என்று ஒரு பாடம் உண்டு. இதில் இந்திய வரலாறு பற்றி கூறப்பட்டு இருப்பது ஒரே மாதிரியான பல்லவியாக இருக்கும். ஆதி காலத்தில், எந்தெந்த ஆண்டுகளில் இந்தியா மீது யார், யார் படையெடுத்து வந்தார்கள்? அந்த அன்னிய நாட்டு மன்னர்களின் விவரங்கள், பின்னர் இந்தியாவின் பல பகுதிகளையும் ஆண்ட மன்னர்கள் ஒருவருக்கொருவர் எந்த இடத்தில் எதற்காக மோதிக்கொண்டார்கள்? அசோகர் சாலைகளில்...

22 March 2015

மீனவர்கள் 54 பேர் கைது: இலங்கை கப்பற்படை நடவடிக்கை

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இலங்கையை சேர்ந்த குழு ஒன்று இந்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில், இந்திய மீனவர்கள் 54 பேரை இலங்கை கப்பற்படை கைது செய்துள்ளது.  இது குறித்து இலங்கை கப்பற்படையின் செய்தி தொடர்பாளர் இண்டிகா சில்வா கூறும்போது, காங்கேசன்துறை பகுதியில் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் மற்றும் 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் பகுதியில் 5 படகுகளில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அடுத்த நடவடிக்கை...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை:!!!

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.  இந்த கொடூர கொலைகளுக்கு மாநில முதல்  மந்திரி ரகுபர் தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், இது குறித்து போலீஸ் அதிகாரிகளுடனும் தாஸ் பேசினார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

21 March 2015

புறப்பட்ட ரெயிலில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்த பலி

தாவணகெரே டவுன் பகுதியை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 63). சின்னத்திரை நடிகர். இவர் கன்னட தொலைகாட்சியில் பல தொடர்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். சீத்தராமன் பெங்களூருவுக்கு செல்வதற்காக காலை ஹரிஹர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது பெங்களூருவுக்கு செல்லும் ரெயில்  மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனால் ஹரிஹர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது சீத்தாராமன் கால் தவறி நடைமேடையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த  அவர்...

10 மீனவர்கள் மீனவர் பேச்சுவார்த்தைக்கு பயணம்???

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 10 மீனவ பிரதிநிதிகள் எதிர்வரும் திங்கட் கிழமை தமிழ்நாட்டுக்கு பயணிக்கின்றனர். அவர்களுடன் 5 மீன்பிடித்துறை அதிகாரிகளும் எதிர்வரும் திங்கட் கிழமை இந்த பேச்சுவார்த்தைக்காக சென்னை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தின்கோரிக்கையின் அடிப்படையில்...

இளைஞர் வாயில் சிறுநீர் கழித்து கொடுமை சிபிசிஐடி விசாரணைக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்கச் சாதிக் கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு, அடிதாங்க முடியாமல் குடிக்கத் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் உள்ளூர் காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசை...

20 March 2015

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகிறது????

இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையிலான இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை பாதுகாப்பு மாநாடு இந்தியாவில் ஆரம்பமாகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனை ஆரம்பித்து வைக்கிறார். சிறிலங்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஸ், மாலைத்தீவு உள்ளிட்ட 20க்கும் அதிகமான நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன. இந்தியாவும், இந்து சமுத்திரமும் என்ற தொனிப்பொருளில் இந்த...

குடிநீர் கட்டணம் 10 சதவீதம் உடனடியாக உயர்வு...

. டெல்லியில், குடிநீர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை முதல்–மந்திரி மணீஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்ற டெல்லி குடிநீர் வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது, உடனடியாக அமலுக்கு வந்தது. மாதத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு இந்த கட்டண உயர்வால் பாதிப்பு இல்லை. டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டத்தை...