This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 January 2015

பதஞ்சலி யோகபீடம் நாட்டுக்கு மிகப்பெரிய சேவையாற்றி வருகிறது;

  ஹரியானா முதல்வர் 'திடீர்' புகழாரம் யோகாகுரு பாபா ராம்தேவ் அண்மையில் ஹரியானா மாநிலத்திற்கான பிராண்ட் அம்பாஸிட்டராக அறிவிக்கப்பட்டார். யோகா மற்றும் ஆயுர்வேதத்தை பரப்புவதில் ஹரியானா அரசுக்கு அவருடைய பதஞ்சலி யோகபீடம்  உதவி புரிவதாக உறுதியளித்தது.  இந்நிலையில், திடீரென அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் பதஞ்சலி யோக பீடத்துக்கு புகழாரம் சூட்டினார். அவை பின்வருமாறு:- இந்தியாவின் கலாச்சார தூண்களாக இருக்கும் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை...

சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி;துவங்குகிறது

 லெபனான், இலங்கை, நேபால், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஆர்மேனியா, ரஷ்யா, பெலாரஸ், கிரிஸிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜியார்ஜியா, தஜகிஸ்தான், குவைத், கத்தார், தாய்லாந்து, உகாண்டா, சிரியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்குபெறும் 29-வது சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ஹரியானாவின் சுராஜ்கந்த்-ல் நாளை கோலாகலமாக துவங்குகிறது.  நாளை முதல் வரும் பிப்ரவரி 15-ந்தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த மேளா நடக்கிறது....

அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களால் ஆயுதப் போட்டி உருவாகும்:

பாகிஸ்தான் கவலை  ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தங்களால் தெற்காசியாவில் ஆயுதப் போட்டி உருவாகும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அச்சம் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் இந்தியப் பயணம் தொடர்பாக,  இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு சர்தாஜ் அஜீஸ் பேசியதாவது.. . இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களால் உருவாகக்கூடிய ஏற்றத்தாழ்வுகளையும்,...

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி ஆலோசனை;

 தமிழகத்தில் உள்ள சுமார் 1 லட்சம் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. 1 லட்சம் அகதிகள் இலங்கையில், கடந்த 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மற்றும் படுகொலைகள் தீவிரமடைந்த போது, அங்கிருந்து சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர். இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் தலையீட்டினால், இதுவரை சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திருப்பி...

30 January 2015

இந்து மதத்திற்கு 100 பழங்குடி கிறிஸ்தவர்கள் மீண்டும் மாற்றம்

மேற்கு வங்காள மாநிலம்   பிர்பூம் மாவட்டம் ராம்புர்கத் பகுதியில்  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய  100க்கும் மேற்பட்ட பழங்குடியினரை விஸ்வ இந்து பரிஷத்தினர் மீண்டும் இந்து மதததிற்கு மாற்றினர்.இந்த மறுமதமாற்ற நிகழ்ச்சியில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஜுகல் கிஷோர் கலந்து கொண்டார், இந்த மதமாற்றம் குறித்து கேட்ட போது விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியதாவது:- சிலர் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என விரும்பினால் நாம் அதை எப்படி...

வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங் அதிரடியாக நீக்கம்!!

இந்திய டெல்லி: நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங் அதிரடியாக நீக்கப்பட்டு ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2013ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் சுஜாதாசிங். அப்போதே பிரதமராக இருந்த மன்மோகன்சிங்,  ஜெய்சங்கரைத்தான் வெளியுறவுத் துறை செயலராக நியமிக்க விரும்பினார் என்றும் ஆனால் சோனியாதான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சுஜாதாசிங்கை...

29 January 2015

பணத்தை பெற்றுக்கொண்டு ஆதாரத்தை சேகரியுங்கள்:

எதிர்கட்சிகளிடம் இருந்து டெல்லியில் உள்ள எதிர்கட்சிகள் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டிவிட்டரில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், எதிர்கட்சிகள் வழங்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இருப்பினும் இந்த செயலை ஸ்டிங் ஆபரசேன்கள் மூலம் பதிவு செய்து எதிர்கட்சிகளின் செயலை அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்...

சிவில் அணுசக்தி உடன்பாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை என்ன???

6 ஆண்டு முட்டுக்கட்டை நீங்கும் வகையில் சிவில் அணுசக்தி உடன்பாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 6 ஆண்டு இழுபறி  இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சிவில் அணுசக்தி உடன்பாடு, 2005–ம் ஆண்டு, ஜூலை 18–ந் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்சுக்கும் இடையே வாஷிங்டனில் கையெழுத்தானது. கடைசியாக...

28 January 2015

போர் விமானம் விழுந்து நொறுங்கியது விமானி உயிர் தப்பினார்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்–27 ரக போர் விமானம், உத்தர்லை படை தளத்திற்கு புறப்பட்டது. வழியில் இந்த விமானம், என்ஜின் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார். பாகிஸ்தான் எல்லை அருகே நேற்று மாலை 3.10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. விமானத்தின் ஒரு பாகம் தீப்பிடித்து எரிந்த நிலையில் மகாபர் கிராமம் அருகே சாலையில் சென்ற மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது....

ஜோடிக்கப்பட்டது ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை நிறைவு செய்தார்

 சொத்து குவிப்பு வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பு மூத்த வக்கீல் குமார் இறுதி வாதத்தில் எடுத்துரைத்தார். இத்துடன் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் வாதம் நிறைவடைந்தது. மேல்முறையீட்டு மனு  சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தண்டனை வழங்கி பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக ஐகோர்ட்டு...

சன் டி.வி. அதிகாரி கைது ஆணையத்தில் புகார்

 கைது செய்யப்பட்ட தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் செயலாளர் மற்றும் சன் டி.வி. அதிகாரி சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. சி.பி.ஐ. கைது சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலாளராக இருந்த வி.கவுதமன், தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோர், கடந்த 21–ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால்...

27 January 2015

இந்தியாவின் தார்மீக கடப்பாடு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டியது! -

  விக்னேஸ்வரன் வலியுறுத்தல் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,...

ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு!!

  இந்தியாவில், ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார். தொழில் அதிபர்கள் மாநாடு டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ–அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா, மகிந்திரா அன்ட் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்த்ரா உள்பட 17 தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்க...

குடியரசு தின விழாவில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு??

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை பார்வையிட வந்த பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அணிவகுப்புக்கு மாவோஸ்டுகள் இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று கருதியதால் பொதுமக்கள் கொண்டு வந்த கருப்பு தொப்பி, ‘மப்ளர்’ உள்ளிட்ட தலைகவசப் பொருட்களை நுழைவு வாயிலில் பாதுகாப்பு படைவீரர்கள் அனுமதிக்கவில்லை. மேலும், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியதும் ராஜபாதை பகுதியில் வெளியே செல்லும் பாதைகள் மூடப்பட்டன. விழா முடிந்த...

26 January 2015

பத்மஸ்ரீ விருது பி.வி.சிந்து உள்பட 5 பேருக்கு !!

மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 6 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். உலக பேட்மிண்டன் போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்ற ஒரே இந்தியரான வீராங்கனை பி.வி.சிந்து,  இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங், ஆக்கி வீராங்கனை சபா அஞ்சும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், முன்னாள் கைப்பந்து வீராங்கனையும், தற்போது மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டு வருபவருமான அருனிமா சின்ஹா...

எதிர்ப்பு தெரிவித்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு!!!

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசாவில் ரயில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. முனிகோடா ரயில் நிலையம் அருகே முனிகோல் என்ற இடத்தில் நேற்று தண்டவாளத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் காயமடைந்தார். குண்டு வெடிப்பில் தண்ட வாளம் சேதம் அடைந்தது. தகவலறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள்  சென்று சோதனை நடத்தினர். அப்போது வெடித்தது சக்தி வாய்ந்த குண்டு என்பது தெரியவந்தது ஒரு...

25 January 2015

நிச்சயதார்த்தத்தில் கலந்துக்கொண்ட பிரபலங்கள்!

  த்ரிஷா நிச்சயதார்த்தத்தில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் யார் யார் நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் சென்னை யில் நேற்று நடந்தது. நடிகர்கள் கமல், சரத்குமார், பிரபு உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வரும் த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் ஆகியோருடன் நடித்துவிட்டார். தமிழைத்தவிர தெலுங்கிலும்,...

ஆப்கானித்தானுக்கு உதவ அமெரிக்கா இந்தியா முடிவு ??

 அடுத்த தலைமுறைக்கு மாசற்ற உலகம் -குடியரசு தின விழாவில் பங்கேற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலக அமைதி, வளத்துக்கு அமெரிக்க ஒத்துழைப்பு அவசியம் என்றும் மோடி பேசினார். வர்த்தக ரீதியிலான ஒத்துழைப்புக்கு இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மோடி கூறினார். ராணுவத்துக்கு தேவையான நவீன கருவிகளை தயாரிக்க கொள்ளை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இருதரப்பு பேச்சுவார்தை குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம்...

நிவாரண நிதியாக ரூ.7800 கோடி கோரி வாலிபர் கைது!!!

பீகாரில் ஒபாமாவிற்கு கடிதம் எழுத முயற்சி செய்ததாக பீகார் கயா பகுதியை சேர்ந்த இனாம் ராஜா வயது 40 என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பீகார் மாநிலம் போதி கயாவில் உள்ள இணையதள மையத்திற்கு இனாம் ராஜா (வயது 40) என்ற வாலிபர் வந்தார். அங்கு வந்த இனாம் ராஜா ஒபாமாவிற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்று கடையின் உரிமையாளரிடம் கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் உடனடியாக அருகில் உள்ள காவல்...

24 January 2015

தயாராகிறார் பிளஸ்டூ தேர்வுக்கு லட்சுமி மேனன்""

கடந்த வருடம் தமிழில் மூன்றும் மற்றும் மலையாளத்தில் வெளியான 'அவதாரம்' உட்பட மொத்தம் நான்கு படங்களில் நடித்த லட்சுமி மேனன் இந்த வருடத்தில் புதிய படங்கள் எதுவுமே ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது அவர் கார்த்தியுடன் நடித்துள்ள 'கொம்பன்' படம் கூட போன வருடமே ஒப்பந்தமானதுதான். அதுமட்டுமல்லாமல், கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்த 'சிப்பாய்' வெளிவருமா, வராதா என தெரியாமல்  கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில் லட்சுமி மேனன் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாததற்கு...

வௌ்ளி உயர்ந்தது தங்கம் குறைந்தது –

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. அதேசமயம் வௌ்ளியின் விலை உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்–வௌ்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம்  ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,660–க்கும், சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.21,280–க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து ரூ.28,450–க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வௌ்ளியின் விலை உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வௌ்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.43.30–க்கும், பார்வௌ்ளி...

சிகிச்சைபலனின்றி பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி!!

  சென்னையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மறைமலைநகரில் வசித்து வந்த சரஸ்வதி என்பவர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து சரஸ்வதிக்கு...

தீவிரவாதிகள் உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். இந்திய பத்திரிக்கை ஒன்றுக்கு  பேட்டி அளித்துள்ள அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து போராடி வருகிறது. மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாத ஒழிப்பில் இருநாடுகளும் கைகோர்க்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட  வேண்டும்...

23 January 2015

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் புலனாய்வு துறை

 மராட்டியம் உள்பட 4 மாநிலங்களில் வருகிற 28–ந்தேதிக்குள் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகள் குடியரசு தினத்தை முன்னிட்டு மும்பையில் சிவாஜிபார்க் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் வருகிற 28–ந்தேதிக்குள் மராட்டியம் உள்பட 4...

இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்வு!!!

 2001-2011ம் ஆண்டுகளில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தநாட்டு மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகை எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.  மதவாரியாக நடத்தப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் (68.3 சதவீதம்), உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அசாமும் (34.2 சதவீதம்), மேற்கு வங்காளமும் (27 சதவீதம்), உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

22 January 2015

பன்றி காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவக் குழு

 நேரில் ஆய்வு தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலால் 21 பேர் பலியாகி உள்ளனர்.தற்போது 180-க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு  சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. நேற்று 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் 2 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி மத்திய அரசுக்கு பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய சிறப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்....

கடவுளின் தவறு மக்களின் குறைகளை பூர்த்தி செய்யாதது??

கோவாவில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான திரைப்படவிழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்-மந்திரி லக்‌ஷிமிகாந்த் பர்சேகர் கூறியதாவது: சில மனிதர்கள் இறைவனின் படைப்பில் ஊனமாகவும் குறை உள்ளவார்களாகவும் படைக்கின்றான் அது அவர்களின் குற்றம் அல்ல அது கடவுளின் குற்றமே கடவுளின் புறக்கணிப்பு என்று கூட கூறலாம். சமூகத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு சில விஷயங்களை கடவுள் கொடுக்க மறந்து விடுகிறார். அதனால் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பாதிக்கபடுகின்றனர். கடவுள்...

கொன்று நகை கொள்ளை: வாலிபருக்கு தூக்கு தண்டனை-

நகை வாங்குவது போல் நடித்து நகை கடை உரிமையாளரை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பூராராம் (வயது 65). இவருடைய மகன்கள் கானாராம் (30), குணாராம் என்ற கணேஷ் (28). இவர்கள் கடந்த பல வருடங்களாக மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.  அதே பகுதியில் உள்ள பட்டேல் சாலையில் இவர்கள் சொந்தமாக நகைக்கடை மற்றும்...

21 January 2015

சசி தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு!!

 ஓரிரு நாட்களில் மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். ஓரிரு நாட்களில் விசாரணைக்காக அவர் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. சுனந்தா கொலை வழக்கு முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17–ந்தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....